Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஆண்குறி எப்படி இருக்கும்?

ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் மிக முக்கியமான உறுப்பு ஆண்குறியும் விதைகளும் ஆகும். ஒரு ஆணின் ஆண்குறியின் அமைப்பு எப்படி இருக்கும்? ஆண்களின் விதைகள் எப்படி இருக்கும்? 

Male Penis Art

ஆண்களினது ஆண்குறியும் விதைகளும் எப்படி செயற்படுகிறது என்பன தொடர்பாக விரிவாங்க இந்தப் பதிவில் பார்ப்போம்.

3D Model of Male Penis - Sex Education in Tamil
வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறியின் 3D மாதிரி உருவம்.

ஒரு ஆண் அவனது ஆண்குறியின் மூலம் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அது தான் உண்மை.

Male Penis and Balls

ஆண்களின் ஆண்குறி, விதைப்பை பற்றி ஒர் ஆழமான‌ மருத்துவ அலசல்:

ஆண்குறியின் அமைவிடம்: ஆண்களின் ஆண்குறி இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும்.

Penis Location in Male Body

ஆண்குறியின் அமைப்பு(Structure of the Penis)

ஆண்குறி மூன்று அடுக்கு மென்மையான மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும்.

ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும், மேல் பகுதியில் இருதிசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது.

Internal Structure of Penis

ஆண்குறியானது விறைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும்.

இந்த மூன்று உருளைகளிலும் மென்மையான திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக் குழாய்கள் செல்கின்றன.

Penis Anatomy

ஆண்குறி முழுவதும் ஓடும் ஏராளமான உணர்ச்சி நரம்புகளை தொடும் போதும், அழுத்தப்படும் போதும் எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் ஆண்குறி அமைந்துள்ளது. கிளர்ச்சியுற்ற நிலையில் நிறைய இரத்தம் பாய்வதால் திசுக்கள் உப்பி ஆண்குறி விறைக்கிறது.

It's normal for your penis to be veiny

It's normal for your penis to be veiny: புடைத்தெழுந்த நிலையில் எல்லா ஆண்களின் ஆண்குறிகளிலும் நரம்புகள் வெளித்தெரியும் வகையில் இருக்கும். ஆகவே ஆண்குறியில் நரம்புகள் புடைத்து வெளித்தெரிவது இயல்பான ஒன்று.

ஆண்குறியின் மொட்டு

ஆண்குறியின் நுனி அல்லது தலைப்பகுதி(மொட்டு/குடை/தொப்பி) மிக மென்மையான மழுங்கிய அமைப்பு போன்றது. இதில் ஏராளமான நுண்ணிய நரம்பு முனைகள் உள்ளன. இது மிக உணர்ச்சி மிக்க பகுதி.

Penis Anatomy Cross Section

ஆண்குறியின் நடுப்பகுதியை(Shaft) விட தலைப்பகுதியில்(Glans of Penis) தான் உணர்ச்சிகள் மிகுதியாக இருக்கும். 

Men Penis Parts

தலைக்கும் உடலுக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும்(Shaft/ஆண்குறியின் தண்டு), தலையோடு முன் தோலைக்(Foreskin) கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

ஆண்குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ/உருவுவதிலோ அல்லது மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.

தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலியும், எரிச்சலும் ஏற்படும். 

ஆண்களின் ஆண்குறியில் கொரோனா உள்ளதா? ஆம். ஆண்குறியின் மொட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள விளிம்பை கொரோனா(Penis Corona - the rounded projecting border or flare that forms at the base of the glans in human males) அல்லது Penis Crown(ஆண்குறியின் கிறீடம்) எனவும் அழைப்பர். இதன் காரணமாகவே நமது சமூகத்தில் சில ஆண்கள் ஆண்குறியின் மொட்டினை தொப்பி என செல்லமாக அழைப்பதுண்டு. 

ஆண்குறியின் மொட்டின் கழுத்துப் பகுதியில்(Neck of Penis Head and Corona of Penis) வரிசையாக ஒரு சங்கிலி(Like Chain) போல பருக்கள் போன்ற அமைப்பு உள்ளதா?

ஆண்குறியின் தலையைச் சுற்றி காணப்படும் சிறிய முத்துக்கட்டிகள் 

சில ஆண்களுக்கு ஆண்குறியின் தலைப்பகுதியின்(மொட்டின் கழுத்துப் பகுதியில்) கீழ் வரிசையாக முத்துக்கள் போல கோர்வையாக சிறு கட்டிகள் இருக்கும். இவற்றை Pearly Penile Papules(PPP) என அழைப்பர். இவை எண்ணேய் சுரப்பிகளாகும். இவை ஆண்குறியின் பகுதியாகும். இவை ஆண்குறியின் மொட்டை வரண்டு போவதில் இருந்து தடுக்க உதவுகிறது.

Pearly Penile Papules(PPP) எல்லா ஆண்களுக்கும் இருக்கும், ஆனால் அவை சிலருக்கு மாத்திரமே வெளித்தெரியும். காலப்போக்கும் அவை தானாகவே மறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.

Carbon Dioxide Laser (CO2 laser) சிகிச்சை மூலம் விரும்பினால் அவற்றை நீக்கலாம். இது கிட்டத்தட்ட முகத்தில் உள்ள மருக்களை நீக்குவது போல ஆகும். ஆனால் ஒரு வைத்தியரின் மேற்பார்வையுடனேயே இவற்றை நீக்க வேண்டும். கண்மூடித்தனமாக ஆண்குறியுடன் விளையாட வேண்டாம்.

ஆண்குறியில் எலும்பு இல்லை. அதற்காக இஸ்டத்திற்கு வளைக்கவும் கூடாது. ஆண்குறி விறைப்படைவது பாதிப்படையும்.

ஆண்களுக்கு ஆண்குறி புடைத்தெழும் போது நேராக இருக்காது. ஏதாவது ஒரு பக்கத்திற்கு வளைந்தது போல இருக்கும்.

Male Reproductive System explained in Tamil

உங்களுக்குத் தெரியுமா?

என்ன தான் ஒரு ஆண் வெள்ளையாக இருந்தாலும் அவனது ஆண்குறி கருமையான(Dark - Not Black) நிறத்திலேயே இருக்கும். உதாரணமாக சில ஆண்களுக்கு Dark Brown or Black கலரில் ஆண்குறி இருக்கும்.

Mostly Men Penis Color is Darker than their Skin Color

ஆண்குறியின் முன் தோல்(Foreskin)

ஆண்குறியின் மேல் தோல்(Foreskin) மேலும் கீழும் நகரக் கூடியது. முன் தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும். சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல்(Phimosis) வலி எடுக்கும். 23 வயதைத் தாண்டியும் அந்தப் பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய முன் தோல் நீக்கும் அறுவை சிகிச்சை (Circumcision) மற்றும் Steroid Cream வைத்தியம் உள்ளது. எதுவாக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று அதனை மேற்கொள்வது நல்லது.

ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கி ஆண்குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் ஆண்குறியின் மொட்டில் படியும் வெள்ளை நிறப் பசை போன்ற குறிமெழுகு(Smegma) எனும் தோல் கழிவை அகற்ற முடியும். சுன்னத் முறை(Circumcision) மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.

முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையை அனைத்து யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர்.

முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையால் தொற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது.

முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையால் ஆண்குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர். 

இதனால் நீண்டநேரம் உடலுறவில் ஈடுபடமுடியும் என இன்னொரு சாரர் எண்ணுகின்றனர் ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல.

ஆண்குறியின் அளவு

ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஆண் மாறுபடும். நிறம், அளவு , வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு.

Men Penis Shapes
உங்கள் ஆண்குறி எப்படி இருக்கும்?

உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் உதடுகளின் நிறத்திலேயே அவர்களின் ஆண்குறியின் மொட்டு இருக்குமாம். 

Dick Head Color Meme

ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று ஆய்வு நடத்தினாலேயே தெரியும். உங்கள் ஆன்குறியின் மொட்டின் நிறமும் உங்கள் உதடுகளின் நிறமும் ஒன்றா?

சராசரி ஆண்குறியின் அளவு

சராசரி ஆண்குறியின் அளவு 9.16 (3.61 inches) - 13.12(5.16 inches) சென்டிமீட்டர் நீளம் இருக்கும். நீண்ட ஆண் குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண்குறிகளில் நிறைய ரத்தம் பாயும். இதன் மூலம் அவை பெரிய ஆண்குறிகளை விட அதிகம் விறைப்பாக இருக்கும்.

பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே.

எத்தனை சிறிய ஆண்குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பதுதான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் 3 Inches அளவிற்கே ஏராளமான உணர்ச்சி நரம்பு நுனிகள் உள்ளன. அதற்கு மேலே சென்றால் காம உணர்வுகள் எதுவும் தூண்டப்படாது.

பெண்குறியின் ஆழத்தில் எந்த உணர்ச்சி நரம்புகளும் இல்லை.

அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண்குறி (Micro Penis) அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் செக்ஸ் வளரூக்கியான டெஸ்டோஸ்டீரான்(Testosterone/ஆண்மையியக்குநீர்) என்ற ஹோர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம்.

சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி உள்ளது, நம்மால் பெண்ணைத் திருப்திப்படுத்தமுடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மனரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மை குறைவு ஏற்படும் வாய்ப்புண்டு.

How does Male Penis Look - Penis Shapes and Sizes - Foreskin, Balls, Glans, Shafts, Veins in Penis, Foreskin Length
 
How does Male Penis Look - Penis Shapes and Sizes - Foreskin, Balls, Glans, Shafts, Veins in Penis, Foreskin Length

How does Male Penis Look - Penis Shapes and Sizes - Foreskin, Balls, Glans, Shafts, Veins in Penis, Foreskin Length

How does Male Penis Look - Penis Shapes and Sizes - Foreskin, Balls, Glans, Shafts, Veins in Penis, Foreskin Length

How does Male Penis Look - Penis Shapes and Sizes - Foreskin, Balls, Glans, Shafts, Veins in Penis, Foreskin Length

How does Male Penis Look - Penis Shapes and Sizes - Foreskin, Balls, Glans, Shafts, Veins in Penis, Foreskin Length

விதைப்பை

ஆண்குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் முடி வளர்ச்சி காணப்படும்.

விதைப்பை  உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் அமைந்துள்ளன. இந்த விதைகள் வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் தளர்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். 

குளிரில் இறுகிச்சுருங்கி மிகச் சிறியதாக உடலுடன் ஒட்டிக் காணப்படும். இதுதான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம். விதைகளில் விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள தேவைப்படும் வெப்ப நிலையை ஒரே அளவில் பேணவே இவ்வாறு நிகழ்கிறது.

பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல்பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

ஆண்களுக்கு விதைகள் இரண்டு உள்ளது. அவை விதைப்பையின் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது.

ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள் உண்டு. ஒன்று ஆண் Hormone(இயக்குநீர் அல்லது ஹார்மோன்) சுரப்பது.  இன்னொன்று உயிரணு உற்பத்தி ஆகும். 

டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) ஹார்மோன் இல்லையேல், ஆண்மை இல்லை எனலாம்.

விந்து

விந்து ஒட்டக்கூடிய வழவழப்பான தண்ணீர், சளி போன்ற ஒரு திரவம்.

விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல்.

விந்து வெளியாகும் போது அது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்.

விந்து, விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 72 நாட்கள் ஆகும்.

ஒரு விந்தணு 3 பாகங்களைக்கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.

ஆண்களின் விந்து எப்படி உற்பத்தியாகிறது? மற்றும் ஆண்கள் விந்து வெளியேற்றும் படிமுறையை விளக்கமாக வாசித்து அறிய இங்கே அழுத்தவும்.

விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு சுக்கிலச் சுரப்பி(Prostate/ப்ரோஸ்டேட்/புரோஸ்டேட்)எனப்படும் சுரப்பியின் உள்ளே சென்று தங்கும். 

ஆண்கள் சுய இன்பம்/கலவியில் ஈடுபடாத விடத்து தூக்கத்தில் முதிர்ச்சியடைந்த விந்துக்களை உடல் வெளியேற்றும்.

இந்த சுக்கிலச் சுரப்பியானது(Prostate) சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம்(Rectum) எனப்படும் குதம்  சுக்கிலச் சுரப்பியின் பின்புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ஆசனவாய் வழியாக  சுக்கிலச் சுரப்பியையும் பரிசோதனை செய்யலாம்.

மலம் கழிக்க முக்கும் போது ஆண்குறியில் இருந்து வெள்ளை நிற பால் போன்ற திரவம் வருவது இந்த சுரப்பி தூண்டப்பட்டதன் விளைவினால் ஆகும். Male G spot, அதாவது ஆண்களின் ஜி ஸ்பாட் Prostate ஆகும்.

Prostate ஆனது சிறுநீர் பையில் இருந்து சிறுநீரை வெளிற்ற உதவுகிறது. அதே நேரம் Prostate Gland ஆனது விந்தணுக்களை ஓரிடத்தில் இருந்து ஒன்னொரு இடத்திற்கு நகர்த்தக் கூடிய விந்துப்பாய்மத்தையும்(Seminal Fluid) உருவாக்குகிறது.

விந்துப் பாய்மத்தின் ஒரு பகுதியை Seminal Vesicle/Seminal Glands/Vesicular Glands உருவாக்குகிறது. அது விந்துக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள், மற்றும் பெண்குறியினுள் விந்து நுழையும் போது உருவாகும் ஒரு வித அமிலத்தன்மையை சரி செய்யக் கூடிய திரவத்தையும் உருவாக்குகிறது.

Seminal Vesicle மற்றும் Prostate Gland, Semen(விந்துப் பாய்மம்) யை உற்பத்தி செய்கின்றன. இது பால் போன்ற நிறத்தில் இருக்கும். இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. 

ஒரு முறை வெளியாகும் விந்தின் அளவு 5.மி.லி ஆகும். ஒரு மில்லி லிட்டர் விந்தில் 4முதல் 12கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக்  கற்னையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?

விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம். ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர்வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.

மன்மதச் சுரப்பிகள்(Cowper's Gland) எனப்படும் பட்டாணி(Pea Size) அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. Glands of Littre சுரப்பிகள் சிறுநீர்க்குழாயினுள் இருக்கும்.

Glands of Male Reproductive System

அவை சுரக்கும் திரவமானது(Precum) கிளர்ச்சியின் போது(Sexual Arousal) உச்சக்கட்டத்திற்கு(Orgasm) முன்னர் ஆண்குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள்(நீர்த்துளி) போல இருக்கும். ஆனால் பெரும்பாலானோர், இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. 

இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. 

இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத் திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக் கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.

உடலுறவில் உச்சக்கட்டம்

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப் போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து  விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இதற்கு இப்படி விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக் கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்தை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை இது ஒருவரின் மதிப்பீடு.

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான்

அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

ஆண் கருத்தடை

விதையிலிருந்து புறப்படும் 40செ.மீ. நீளமுள்ள வாஸ்டிபரன்ஸ்(Vas deferens) என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம்தான் ஆண்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

Structure of the Testes and Epididymis

ஆண்கள் கருத்தடை செய்துகொண்டால் உடலுறவில் நாட்டம் இருக்காது என்ற தவறான கருத்து நிலவுகிறது, ஆண் கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் உடலுறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கருத்தடைசெய்து கொண்ட ஆண்கள் சாதாரணமாக உடலுறவு கொள்வதுடன் உச்சகட்டத்தை அடைவதிலும் எந்த ஒரு தடையுமில்லை.

ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?

ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபித்துவிட முடியுமா?

மருத்துவரீதியாக ஓர் ஆண், தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியாது. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடை முறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. 

சிலர் தன்பாலின விருப்பம் கொண்ட ஹோமோ செக்ஸுவல்(Homosexual) இருப்பார்கள். 

சிலர் போதைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள் சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபடமுடியாது. மற்ற பெண்களிடம் நார்மலாக இருப்பார்கள் (Selective Impotence). இதுபோன்ற நபர்களைப் பரிசோதித்தால் ஆரோக்கியமாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும். பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமுறையில் சரியாகச் செயல்படுபவராகவும் இருக்கலாம்.

பாலியல் உறவில் மனம் பெரும் பங்கு வகிப்பது தான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அந்நியோனியம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. 

ஆனால், பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற்றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடியும்.

ஆண்மலட்டுத்தன்மைக்கும் ஆண்மையின்மைக்கும் என்ன வித்தியாசம்?

ஆண்மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடைய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத் தன்மை இருக்கலாம். 

ஒருபெண்ணுடன் உறவு கொள்ளமுடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொண்டிருக்கலாம். 

தம்பதி என்ன செய்ய வேண்டும்?

துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத்து வரவேண்டும். நான்கு சுவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. 

தம்பதிக்குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்களாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங்களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்.

ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

இன்று மருத்துவம் பலவிதத்திலும் முன்னேறி இருக்கும் நிலையில் ஆண்மைக்குறைவுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்து விடுகிறது.

இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அதனால், 90% பேர் கவுன்சலிங் கொடுத்தாலே குணமாகி விடுவார்கள். 5% பேருக்கு மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் தேவைப்படும். மீதி 5% பேர் மட்டுமே கொஞ்சம் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய வர்கள். 

அதற்கு, பிரச்சனை என்னவென்று முதலில் மருத்துவருக்கு தெரியவேண்டும். 

பிரச்சனையை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மறைக்க முயற்சிப்பது, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்களோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவுக்கு வெளியே இன்னொருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல்கள் அல்ல.

பாலியல் கல்வி ஏன் அவசியம்?

பாலியல் கல்வி என்றவுடனே பதறிப் போய் அதெல்லாம் தப்பு என்று சொல்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பாலியல்கல்வியில் கிளர்ச்சியூட்டுகிற படங்களை காட்டப்போவதில்லை கதைகள் சொல்லப் போவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களது உடல்பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்து திடீரென வாலிப வயதுக்குள் நுழையும் ஓர் ஆணும் பெண்ணும் திடீரென உடல் மாற்றங்களால் குழப்பமடைகிறார்கள். இதைப் புரியவைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

திருமணத்துக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரையோ, பாலியல் சிகிச்சை மருத்துவரையோ சந்தித்து தனக்கிருக்கும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம் காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். 

தயக்கம் என்ன?

குழந்தையின்மைக்கான பரிசோதனைக்கு முன் வருவதில் ஆண்களுக்கு இருக்கும் அதே தயக்கம், பெண்களுக்கும் இந்த விஷயத்தில் இருக்கும்.

மாற்றம் தேவைப்படுகிற விஷயங்கள் 

பிரச்சனைனு சொல்லிக்கிட்டு கணவன்-மனைவி ரெண்டுபேரும் வருவாங்க. தனக்குத்தான் பிரச்சனைங்கிற மாதிரியே இருக்கும் மனைவியோட அணுகுமுறை. பேசிப்பார்த்தா, கணவருக்குத்தான் பிரச்சனைங்கிறது தெரிய வரும். 

குழந்தையில்லைங்கிற நிலைமையில ஒரு பெண் தன்கிட்ட பிரச்சனை இருக்கலாம்னு சந்தேகப்பட்டு பரிசோதனைகளுக்குத் தயாராகிற மாதிரி, ஆண்மைக் குறைபாடுகள் விஷயத்துல ஒரு ஆணால தைரியமா முன் வர முடியறதில்லை.

ஆண்மைக் குறைபாடுங்கிறதை ரெண்டு விதமாக பார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணுக்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோசமான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்சனைகள், அதனால தாம்பத்திய உறவுல ஈடு பட முடியாமப் போகிறது ஒரு வகை.

உண்மையிலேயே உடம்புல பிரச்சனைகள் இருந்து, அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறைபாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலாம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பையில கோளாறு’னு ஒரு பெண் தயங்காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்சனைகளை வெளியில சொல்லத் தயாராகணும். 

கவுன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்சனைகளும் தீர்க்கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக்கம்.

ஆண்களின் ஆண்குறி பற்றி சுருக்கமாக:

Male Reproductive System - Anatomy of Male Penis in Tamil

ஆண் பிறப்புறுப்பு உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் அமைந்துள்ளன.

வெளிப்புற உறுப்புகள்:

1. ஆண்குறி

2. விதைப்பை

உட்புற உறுப்புகள்:

1. விதைநாளம்

2. விரைகள்

3. விந்துசுரப்பி

4. புரோஸ்ட்ரேட்சுரப்பி

5. சிறுநீர்தாரை

ஆண்குறி:

ஆண்குறி என்பது ஆணின் உறுப்பு. இது உருளையான நீள வடிவத்தில் உள்ளது. சில நேரங்களில் இது கடினமாகவும் விரைப்பாகவும் இருக்கும். சில நேரங்களில் இது தளர்வாக இருக்கும். ஆண் குறியில் எலும்புகள் இல்லை. இதில் பஞ்சு போன்ற குழாய் திசுக்கள் அதிக அளவில் இருக்கும். ஆண்களின் பாலுணர்வு தூண்டப்படும் போது இக்குழாய்களில் இரத்தம் நிரப்பப்படும். இதனால் ஆண்குறி விரைப்படைகிறது. விறைப்புத்தன்மை குறையும் போது இரத்தம் இரத்தக்குழாய்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. சிறுநீர்த்தாரை ஆண்குறியின் வழியாக வெளியே திறக்கிறது. இதன் மூலம் சிறுநீர் மற்றும் விந்து நீர் வெளிப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் வெளியேறுவதில்லை.

ஆண்குறியின் முகப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது ஆண்குறி மொட்டு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அதிக நரம்புகள் முடிவடைவதால் இது மிகவும் உணர்ச்சியை தூண்டக்கூடிய பகுதியாக உள்ளது. இதை மூடியுள்ள தோல் மிக மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். இதற்கு மொட்டு உறை அல்லது நுனித்தோல் என்று பெயர். இதை எளிதாக பின்புறம் தள்ள முடியும். இந்த தோல் அகற்றப்படுவதற்கு தோல் நுனியிதழ் அகற்றுதல் சுன்னத் அல்லது விருத்த சேதனம் என்ற பெயர். ஆண்குறி ஆண்களின் மகிழ்ச்சியை தூண்டும் உறுப்பாகும். இதுவே உடலுறவு கொள்ளும்போது பெண் குறியினுள்ளோ ஆசனவாய் உள்ளோ செலுத்தப்படுகிறது.

விதைப்பை:

இது ஆண்குறிக்கு பின்னால் தொங்கியபடி இருக்கும் சிறிய பை ஆகும். இதனுள் விரைகள் உள்ளன. விதைப்பை விரைகளை பாதுகாப்பதோடு விந்தணுக்கள் உருவாவதற்கு தேவையான வெப்ப நிலையில் அவை இருப்பதற்கு உதவியாக உள்ளன.

விரைகள்/கொட்டைகள்/விதைகள்:

இரண்டு விதைப்பைகளுக்குள்ளும் இரண்டு விரைகள் உள்ளன அவைநீள் வட்ட வடிவத்தில் சிறியதாக இருக்கும். விரைகளில் விந்தணுக்களும் ஆண் இயக்கு நீரான டெஸ்டோஸ்டிரோனும் உருவாக்கப்படுகிறது. விரைகள் தொடுதல் மற்றும் அழுத்தத்துக்கு உணர்ச்சி வசப்படக்கூடியது. இதில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவை சுமாராக பனிரண்டு வயதில் ஆரம்பமாகி ஆயுள் முழுவதும் தொடர்ந்து உருவாகின்றன. இவையே குழந்தை உருவாக தேவையான விதைகள் ஆகும். டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி நீர் பாலுணர்வு தூண்டப்படவும், இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்களான மீசை முளைத்தல் ஆகியவை நிகழவும் காரணமாக உள்ளன.

விதை நாளம்:

ஆண் குறிக்கு இரண்டு பக்கமும் உடலின் உட்புறத்தில் இரண்டு குழாய்கள் உள்ளன இவை விந்தணுக்களை விரைப்பையிலிருந்து சிறுநீர் தாரைக்கு அனுப்புகின்றன. ஆண் குடும்ப நல அறுவை சிகிச்சையின் போது இந்த குழாய்களைத்தான் துண்டிக்கிறார்கள். இவற்றை விந்துக்குழாய் என்றும் அழைக்கிறார்கள்.

விந்து சுரப்பிகள்:

இரண்டு விந்து சுரப்பிகள் உள்ளன. பை போன்ற அமைப்புகளான இவை 60 சதவீத நீர்மத்தை வழங்கி விந்தணுக்கள் இவற்றில் நீந்திச்செல்ல உதவுகின்றன. இந்த வெள்ளை நிற திரவம் விந்தணுக்களுக்கு தேவையான உணவை வழங்குகின்றது. விந்தணுக்கள் மற்றும் விந்து நீர்அடங்கிய விந்து சிறுநீர்த்தாரை வழியாக வெளியே தள்ளப்படுகின்றது. சிறுநீர்த்தாரை சிறுநீர் அல்லது விந்து மட்டுமே ஒரு நேரத்தில் வெளியே வருமாறு அமைந்துள்ளது.

புரோஸ்ட்ரேட் சுரப்பி:

புரோஸ்ட்ரேட் சுரப்பி சிறுநீர்பைக்கு சற்று கீழே வால்நட் அளவில் இருக்கும். இது விந்துவில் உள்ள 30 சதவீத திரவத்தை சுரக்கிறது. இந்த திரவம் காரத்தன்மை உள்ளதாக இருப்பதால் இது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க பாதையில் நிலவும் அமிலத்தன்மையை சமன்படுத்த உதவுகிறது. புரோஸ்ட்ரேட் சுரப்பி தூண்டப்படும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது (குறிப்பாக ஆசனவாய்வழி உடலுறவு கொள்ளும்போது) பாலியல் மகிழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக அமைகிறது.

சிறுநீர்த்தாரை:

சிறுநீர்த்தாரை ஒரு பொதுவான திறவமாகும். ஆண்குறியில் அமைந்துள்ள இது சிறு நீர் மற்றும் விந்து வெளியேறும் வழியாகும். ஆனால் ஒரு நேரத்தில் சிறுநீர் அல்லது விந்து ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே வெளிவரும்

Recommended:

பூப்படையும் போது ஆண்குறியில் ஏற்படும் மாற்றங்கள்

வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

Suggestion:

[18+]ஆண்குறியில் இருந்து வெளியேறும் விந்து எப்படி இருக்கும்?

[18+]ஆண்களின் ஆண்குறிகளின் வகைகள்

Keywords:

ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதி, ஆண்களின் ஆண்குறி பற்றி, ஆண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய முழுமையான பார்வை, ஆண் பிறப்புறுப்பு உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் அமைந்துள்ளன, Frenulum and Mushroom Head.

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...