Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பூப்படையும் போது ஆண்குறியில் ஏற்படும் மாற்றங்கள்

அண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் அந்த்ரங்க உறுப்புகள் வளர்ச்சியடையும். ஆண்குறி பெரிதாகும். விதைகள் பெரிதாகி தொங்கும். ஆண்குறியைச் சூழ முடி வளர்ச்சி ஏற்படும்.

Men Bulge in Underwear

ஆண்கள் பூப்படையும் போதும் அவர்களின் ஆண்குறியில் சில வேளைகளில் பின்வரும் மாற்றங்களை அவதானிக்கலாம்:

Men Body Changes with Puberty at Different Ages

1. ஆண்குறி புடைத்தெழும் போது அதிகமான நரம்புகள் வெளித்தெரிவது இயல்பான ஒன்று.

2. உடலின் நிறத்தை விட ஆண்குறி மற்றும் விதைப்பை அதிகம் கருமையாக இருக்கும். இது இயல்பான ஒன்று.

3. குளிரான காலத்தில் விதைப்பை சுருங்கி இறுக்கமாக இருக்கும். அதிக வெப்பமான காலத்தில் அல்லது உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது விதைப்பை தளர்வடைந்து தொங்கிக் கொண்டிருக்கும்.

Men Penis Types
ஆண்குறியின் அமைப்பு ஆண்களுக்கு ஆண்கள் வேறுபடும்.

4. ஆண்குறியின் மொட்டின் கழுத்தின் கீழ் பகுதிகளில்(corona of the glans penis) கோர்வையாக முத்துகள் போன்ற வெள்ளை அல்லது சருமத்தின் நிறத்தை ஒத்த மிகச்சிறிய கட்டிகள் ஒரு சங்கிலித் தொடர் போல உருவாகுவது இயல்பான ஒன்று. இதனை Pearly Penile Papules(PPP) என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இவை ஒரு வகை எண்ணெய்ச் சுரப்பிகளாகும்(Tyson glands - கொழுப்புத்திரவத்தை சுரக்கும் சுரப்பி/Sebaceous Glands). ஆண்குறியின் மொட்டினை காயாமல் வைத்திருக்க இவை உதவுகின்றன. எல்லா ஆண்களுக்கும் இருக்கும். ஆனால் சில ஆண்களுக்கு அவை தனியாக வெளித்தெரியும். இவை ஆண்குறியின் ஒரு பாகமாகும். இதனை நோய் அறிகுறியாகக் கருத வேண்டாம்.

Physical Changes in Body with Puberty

5. மஞ்சள்-வெள்ளை நிற சிறிய கட்டிகள்/புள்ளிகள் போன்ற தோற்றத்தை உடலின் பல்வேறு இடங்களில்(உதடுகள்,விதைப்பை, ஆண்குறியின் தண்டு, பெண்குறியின் இதழகள், முகம், மேலும் பல.) பார்க்கலாம். இவற்றை Fordyce Spots (White Bumps) என்பர். இவை உரோம வளர்சியுடன்(not associated with hair follicles) தொடர்பு படாத Sebaceous Glands ஆகும். இதனை நோய் அறிகுறியாகக் கருத வேண்டாம்.

6. அடிவயிற்றில் மாத்திரமல்லாது பூப்பு மயிர்கள்(Pubic Hair) ஆண்குறியின் தண்டிலும், விதைப்பையிலும் கூட வளரும்.

7. காலையில் எழுந்து ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்திப் பார்த்தால் உள்ளே வெள்ளை நிற பசை போன்ற தோல் கழிவுகள்(Smegma) இருக்கும். அவற்றை குளிக்கும் போது நீரினால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

8. சில ஆண்களுக்கு 15-18 வயது தாண்டியும் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியில் எடுக்க முடியாது வலியில் அவதியுறுவர். இதனை Phimosis(முன் தோல் குறுக்கம்) என்பர். வைத்தியர்கள் பரிந்துரைத்த Topical Steroid Therapy யை செய்தும், 23 வயது ஆகியும் அது சரியாகாவிட்டால் ஒரு வைத்தியரின்(Surgeon) ஆலோசனையைப் பெற்றும் சுன்னத்(Circumcision) செய்யவும்.

Men Penis Parts

9. ஆண்குறியின் முன் தோலில்(Foreskin) ஏற்படும் காயங்கள், ஒவ்வாமை(Allergy/Irritations) காரணமாக முன் தோல் வீங்கலாம். இது தற்காலிகமானது.

10. சுய இன்பம் செய்யும் போது அல்லது கலவியில் ஈடுபடும் போது ஆண்குறியின் மொட்டையும் முன் தோலையும் இணைக்கும் சவ்வு(Frenulum) போன்ற தோல் கிழியலாம். Frenulum இல் காயம் ஏற்பட்டால் அது இலகுவில் ஆறாது, மாறாக அது கிழிய ஆரம்பித்து விடும்.

இதனை நூல் உடைதல் என்பர். இதனை வைத்து ஆண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்ய முடியாது. காரணம், இது எல்லா ஆண்களுக்கும் மெல்லியதாக இருக்காது. சுன்னத் செய்யும் போது இதனையும் நீக்குவர். 

குறிப்பு: ஒரு ஆண் பூப்படைந்து அவனது 16-17 வயதுகளில், சில வேளைகளில் அவனது ஆண்குறியின் மொட்டு(Glans) வெளியிலேயே தங்கி விடும். இதனை Natural Circumcision எனலாம். ஆரம்பத்தில் சற்று அசெளகரியமாக இருப்பினும். சில காலங்களில் சுன்னத் செய்த முஸ்லிம் ஆண்கள் போல அது பழகி விடும். அவ்வாறு வெளியவே உங்கள் ஆண்குறியின் மொட்டு தங்கினால், சில வேளைகளின் அதன் நிறம் குறையலாம். கருமையாகலாம். அது இயல்பான ஒன்றே.

முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்த சில காலங்களுக்கு ஆண்குறியின் மொட்டுக்கு தேங்காய் எண்ணெய் பூசி வருவார்கள். இதன் மூலம் சீக்கிரம் ஆண்குறியின் மொட்டு வெளியே இருப்பதால் ஏற்படும் அசெளகரியமான உணர்வு சரியாகும்.

சில ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோலின் நீளம் குறைவாக இருந்தால் அவர்களின் ஆண்குறியின் மொட்டு பாதியளவே மூடியிருக்கும். அது கிட்டத்தட்ட Hoodie அணிந்திருப்பது போல, அதன் தோற்றம் இருக்கும். இதனை Natural Partial Circumcision என்பர்.

சில ஆண்களுக்கு சற்று மாறுதலாக, ஆண்குறி புடைத்தெழும் போது ஆண்குறியின் மொட்டு முழுமையாக வெளியே வந்து தங்குவதும் உண்டும். ஒரு சிலருக்கு பாதியளவில் வெளியே வந்து இருக்கும். ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோல்(Foreskin) நீளமாக இருந்தால், அதனை பின்னால் நகர்த்தினால் தான் ஆண்குறியின் மொட்டை பார்க்க முடியும். அவர்கள் தினமும் குளிக்கும் போது ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து அதில் படிந்திருக்கும் குறிமெழுகை(Smegma) நீரினால் அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

சில ஆண்களுக்கு பிறக்கும் போதே ஆண்குறியின் முன் தோல்(Foreskin/Prepuce) இல்லாமல் இருக்கும்.

ஆண்களின் ஆண்குறியின் வளர்ச்சி எப்போது பூர்த்தியாகும்? எத்தனை வயது வரை ஆண்குறி வளர்ச்சியடையும்? எத்தனை வயதில் உங்கள் ஆண்குறியின் அளவு இது தான் என்று உறுதி செய்ய முடியும்?

ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியானது 12 வயது முதல் 16 வயது வரை வளர்ச்சியடையும். அந்த வயதில் ஆண்கள் ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்குறியை திடமாக வளர்ச்சியடையச் செய்யலாம். ஆண்குறியின் அளவுக்கும் உங்கள் பரம்பரை அலகுகளுக்கும் மாத்திரமே சம்பந்தம் உள்ளது. நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் ஆண்குறியின் அளவை மாற்ற முடியாது. உங்க உடலின் அமைப்பு(Body Design) எப்படி என்று, உங்கள் பிறப்பின் போது தீர்மானிக்கப்பட்ட படியே பூப்படையும் போது உங்கள் ஆண்குறி வளர்ச்சியடையும்.

ஆண்குறி முதலில் நீளமாக(Length of Penis) வளரும், பிறகு தடிமனாகும்(Girth of Penis). ஆண்கள் 12-16 வயது வரை அதிகம் இறுக்கமான ஜட்டியை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் ஆண்குறியின் வளர்ச்சி பாதிப்படைவதைத் தவிர்க்கலாம். ஆண்களுக்கு 18-21 வயது ஆகும் போது ஆண்குறி முழுமையாக முதிர்ச்சியடைந்து விடும்(fully developed penis). ஆகவே உங்கள் ஆண்குறியின் அளவை 22 வயதின் பின்னரே நீங்கள் உறுதி செய்ய முடியும். அது வரை உங்கள் ஆண்குறியின் அளவைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி சிந்தியுங்கள். இயற்கையான முறையில் Testosterone ஹோர்மோனை Boost செய்யக் கூடிய உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.

குறிப்பு: ஆண்களுக்கு அதிகாலையில் எந்தவொரு காரணமும் இல்லாமல் ஆண்குறி புடைத்தெழும். இதனை Morning Wood என்பர். சிலருக்கு அதிகாலையில் முழு விறைப்பும், ஒரு சிலருக்கும் பாதியளவு விறைப்பும் ஆண்குறியில் ஏற்படும். இதற்கு அவர்கள் முதல் நாள் இரவு சாப்பிட்ட உணவுகளும் செல்வாக்குச் செலுத்தும். இதனை மறைக்க விரும்பும் ஆண்கள் இரவு ஜட்டி அணிந்து தூங்கவும்.

குறிப்பு: சுய இன்பம் செய்யும் பழக்கம் குறைவான ஆண்களுக்கு இரவு தூக்கத்தில், கலவியில் ஈடுபடுவது போன்று கனவுகள்(Wet Dreams) தோன்றி, அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு/கனவு தோன்றி விந்து வெளியேறும். இது இயல்பான ஒன்று. இவ்வாறு மாதம் 1 அல்லது 2 முறை ஏற்பட்டால் நீங்கள் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம். அடிக்கடி ஏற்பட்டால் வைத்திய ஆலோசனை பெறவும். அதற்கான காரணத்தை அறிந்து சரி செய்யவும். இவை தொடர்பாக மேலும் அறிய எமது மற்ற பதிவுகளைப் படிக்கவும்.

Men Puberty Changes

ஆண்குறியினைச் சூழ உள்ள முடிகளை குளிக்கும் போது நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஆண்குறியைச் சூழ உள்ள முடிகளை மழிப்பதை(Full Shave) விட Trim செய்வதே உகந்தது. Full Shave செய்தால் அவ்விடங்களில் தேமல்/தோல் அலர்ச்சி போன்றவை ஏற்படும். அதே நேரம் சீழ்(Pus) வைத்த கட்டிகளும்(Ingrown Hair) உருவாகும்.

ஆண்குறியில் திரும்ப திரும்ப புண்கள், அரிப்பு/சொறி/சிரங்கு போன்றவை ஏற்பட்டால் வைத்திய ஆலோசனை பெறவும். ஆண்கள் பாலியல்/பால்வினை நோய்கள் தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

அவதானம்: வயது வந்த ஆண்கள், ஜட்டி போடாமல் ஜிப் வைத்த Pant போடும் போது கண்மூடித்தனமாக ஜிப்பை மேலே இழுக்க வேண்டாம். 

Why do Men need to be careful when they put the Zip - Pant Zip Issue
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே!

ஜிப்பினுள் உங்கள் ஆண்குறி அல்லது ஆண்குறியின் முன் தோல் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. 

Studying with Hard Dick.

அவதானம்: உங்களுக்கு காம இச்சை அதிகமாக இருக்கும் போது, ஆண்குறி புடைத்தெழுந்திருக்கும் போது வேறு எங்கும் சிந்தனை செல்லாது. ஒழுங்காக படிக்கக் கூட முடியாது. 

காம இச்சையை அதிகரிக்கும் செயற்பாடுகளை(Watching Sex Videos, Talking with Lover, etc.) தள்ளி வைக்கவும்.

நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதன் மூலம், அதாவது மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் சிந்தனையை நேர்வழிப்படுத்தலாம். புடைத்தெழுந்திருக்கும் ஆண்குறியை சாந்தப்படுத்தலாம். ஜட்டி அணிவதன் மூலம், ஆண்குறியின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். மிகவும் முடியாத கட்டத்தில் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றுவதே உகந்தது.

Recommended:
ஆண்களின் ஆண்குறி எப்படி இருக்கும்?

Comments

Popular posts from this blog

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச்சமின்றி ஒருவர

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் செய்யும்

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும். அ

சுய இன்பம் செய்தால் கன்னித்தன்மையை ஆண்கள் இழப்பார்களா?

ஆண்கள் சுய இன்பம் செய்வதை கை அடித்தல், கை முட்டி அடித்தல் எனவும் அழைப்பர். Masturbation, Wank, Jerk off, Touch yourself, Jack off, Play with yourself என ஆங்கிலத்தில் சுய இன்பம் செய்வதை அழைப்பர். சுய இன்பம் என்பது காம இச்சை அதிகமாக இருக்கும் வயதுக்கு வந்த ஆண்கள் ஆண்குறியை கையால் பிடித்து முன்னும் பின்னும் நகர்த்தி சுயமாக இன்பமுற்று விந்து(வெள்ளை நிற பிசின் போன்ற திரவம்) வெளியேற்றும் பாலியல் செயற்பாடாகும். இது எல்லா ஆண்களும் செய்யும் இயல்பான ஒன்று. வயதுக்கு வந்த ஆரம்ப காலத்தில் சில ஆண்கள் படுத்த பாயில் அல்லது மெத்தையில் ஆண்குறியை தேய்த்து சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பர். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்த்து சுய இன்பம் செய்யப் பழகுவர். நீங்க எப்படி சுய இன்பம் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உங்கள் அனுபவத்தை Comment இல் சொல்லுங்கள். சுய இன்பம் செய்தால் விந்து வெளியேற்ற வேண்டுமா?  கட்டாயம் இல்லை. விதைகளை விட்டு சுய இன்பம் செய்யும் போது வெளியேறிய விந்தினைல் வெளியேற்றாவிட்டால் அது உடலினால் அகத்துறிஞ்சப்படும். ஆனால் விந்து வெளியேற்றாவிட்டால், வ