ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.
ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும். அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...