Skip to main content

Posts

Showing posts with the label Abdominal Hair

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஆண்கள் வயதுக்குவரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முந்திய பதிவுல் பார்த்தோம். இந்தப் பதிவில் ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகப் பார்க்கலாம். வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது? விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லா சமூகங்களிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. ஆகவே பதின்ம வயதுடையவ...