Skip to main content

Posts

Showing posts with the label Bulge

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஆண்குறியை பெரிதாக்குவது எப்படி?

ஆண்களின் ஆண்குறியானது அவர்கள் பூப்படைய ஆரம்பிக்கும் போது வளர்ந்து பெரிதாக மாற ஆரம்பிக்கும். ஆண்கள் வயதுக்கு வரும் போது அவர்களின் ஆண்குறி நீளமாக வளரும். ஆண்களின் ஆண்குறி தடிமனாகி கொழுக்கும். விறைப்படையும் போது, தளர்வாக தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்களின் ஆண்குறி, நன்கு விறைப்படைந்து கடப்பாரை போல உறுதியாகும். ஆண்கள் விரும்பினால், அவர்களின் ஆண்குறியை பெரிதாக மாற்ற முடியுமா? ஆண்களின் ஆண்குறியை தடிமனாக மாற்ற முடியுமா? அண்களின் ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க முடியுமா? முடியும். ஆனால் எல்லாம் தற்காலிகமாக தான். இணையத்தளங்களில் காணப்படும் பல்வேறு முறைகளைப் பின்பற்றி ஆண்களால் அவர்களின் ஆண்குறியை தற்காலிகமாகவே பெரிதாக, நீளமாக, தடிமனாக மாற்ற முடியும். ஆண்கள் தலைகீழாக நின்றாலும், அவர்களின் ஆண்குறியின் அளவை, தடிமனை விரும்பிய அளவுக்கு பெரிதாக மாற்ற முடியாது. ஆனால் வளரும் வயதில் அதாவது ஆண்குறி பிஞ்சாக இருக்கும் போதே ஆரோக்கியமான, ஆண்மையை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு, அதனை ஆரோக்கியமாக வளர்த்து நன்கு முற்ற(Mature) வைத்து ஆரோக்கியமான முதிர்ச்சியடைந்த ஆண்குறியாக மாற்றலாம். சில சத்திரசிகிச்சைகள் மூ...

ஆண்களை சிற்றின்பத்தில் மூழ்கடிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆணின் வாழ்க்கைத் துணை அவனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு முதலிரவில் அல்லது முதல் முறை கலவில் ஈடுபடும் போது அவனை அசத்துவது என்பதை தெரிந்து வைத்திருப்பது இந்தக் காலத்தின் தேவையாக உள்ளது. ஆண்குறியை யோனியில் நுழைப்பது பற்றி மட்டும் சிந்தித்த காலம் போய், இன்று ஆபாசப்படங்களின் ஆதிக்கத்தால் சிற்றின்ப விளையாட்டுக்களில் திளைப்பது கலவியில் ஈடுபடும் போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு ஆணின் உடலில் எந்தப்பகுதியை சீண்டினால் அவனுக்கு Bulb எரியும் என்பதை இந்தப் பதில் மேலோட்டமாகப் பார்ப்போம், மிச்சம் உங்கள் கைகளில் தான் உள்ளது. முதலில் ஒரு நல்ல புரிதல் உங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் முதலிரவிற்கு முன்னர் நன்றாக மனவிட்டு பேச வேண்டும். எச்சில் அருவருப்பாகக் கூடாது! அமிர்தமாக வேண்டும். அதற்காகவே முதலிரவில் ஒரே சொம்பில் பால் அருந்த வைக்கிறார்கள். 1. கலவியில் ஈடுபடும் போது தலையின் பின்புறம் முடியைக் கோதுவது ஆண்களுக்கு பிடிக்கும். தலைமுடிக்குள் கை விரல்களை நுழைத்து மண்டையைத் தடவுவது உகந்தது. அதிலும் குறிப்பாக உங்கள் கணவர், பெண்க...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.