வயதுக்கு வந்த ஆண்களின் உடம்பில் எங்கு, எப்படி விந்து உற்பத்தி செய்யப்படுகிறது? உற்பத்தியான விந்து எப்படி ஆண்குறியினூடாக வெளியேறுகிறது? போன்ற விடையங்கள் தொடர்பாக விர்வாக தமிழில் இங்கு பார்ப்போம்.
ஆண்களின் ஆண்குறி எப்படி இருக்கும்? அதன் அமைப்பு போன்றவை தொடர்பாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
விந்து எங்கு உற்பத்தியாகிறது?
விதைகளில்(Testicles) இருக்கும் சுக்கிலச்சிறுகுழாயினுள்(Seminiferous Tubule) விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிறக்கும் போது இந்தக் குழாய்களினுள் சிறிய வட்டமான கலங்களாக இருக்கும்(Simple Round Cells). ஆண்கள் பூப்படையும் போது Testosterone மற்றும் ஏனைய ஹோர்மோன்கள் அவற்றை உயிரணுக் கலங்களாக மாற்றும். இந்த கலங்கள் தலை மற்றும் வால் பகுதி உடையவையாக மேலும் பிரிந்து தவளைக்குஞ்சுகள்(Tadpoles) போல மாற்றமடையும். இவற்றின் தலைப்பகுதியில் பரம்பரை அலகுகள்(genes) இருக்கும்.
ஒரு விந்தணு 3 பாகங்களைக்கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
விதைகளில் உருவான விந்துக்கள் எங்கு சேமிக்கப்படுகின்றன?
விதைகளில் உற்பத்தியான விந்துக்கள் ஒவ்வொரு விதைக்கும் அடுத்ததாக உள்ள Epididymis(விந்தணு முதிர்ச்சிப் பை) எனும் சிக்கலான சுருள் அமைப்பிலான குழாய்களினுள் சேகரிக்கப்படும். Epididymis உள்ள சுருள் போன்ற குழாயை நீட்டினால் அதன் நீளம் 20 அடிக்கு(20 feet) மேல் இருக்கும்.
2: நாளத்திரளின் தலைப்பகுதி
3: நாளத்திரளின் முனைகள்
4: நாளத்திரள் மெய்யம்
5: நாளத்திரளின் வால்பகுதி
6: நாளத்திரள் குழாய்
7: அப்பாற்படுத்து குழாய் அல்லது விந்து வெளியேற்று குழாய்)
விந்துச் சுரப்பியில்(Testicles) உருவான விந்தணு நாளத்திரளின்(அல்லது விந்தக சுருட்டுக் குழாய் - Epididymis/எபிடைமிஸ்) தலைப்பகுதிக்குச் செல்கின்றன; பின்னர் மெய்யம் வழியே வால்பகுதிக்குச் சென்று அங்கு தேக்கப்படுகின்றன. விந்துச் சுரப்பியில் உருவான விந்தணு விந்து தள்ளலுக்கு(Ejaculation) தகுதியானவை அல்ல. அவற்றால் நீந்தவோ சூல்முட்டையை கருக்கட்டவோ இயலாது. வால்பகுதிக்குச் செல்லும் போது விந்தணுவால் கருக்கட்ட இயலும்.
இங்கு விந்தணுக்கள் விந்து வெளியேற்றுக் குழாய்கள் வழியாக விந்துப் பாய்மக் குமிழ்களுக்கு(Prostate) மாற்றப்படுகின்றன. இன்னும் நீந்த முடியாத விந்தணுக்கள் தசை குறுக்கங்களால் இக்குமிழ்களுக்கு மாற்றப்படுகின்றன. விந்துப் பாய்மக் குமிழ்களில் இறுதிநிலைக்கு தயாராகின்றன.
விந்து வெளியேற்றக் குழாய்(Vas Deferens) அல்லது விந்து நாளம்(Ductus Deferens) மனித உடலில் ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஓர் உறுப்பு. இவை விந்து நாளத்திரளின் முடிவுப் பகுதியில் தோன்றும். விந்துச் சுரப்பியின் பின்புறத்தில் மேல்நோக்கி அமைந்திருக்கும். தசைக் குழாய்களான இவற்றைச் சுற்றி மென்மை தசைகள் உள்ளன. இடது மற்றும் வலது நாளத்திரள்களை விந்து பீச்சுக்குழல்களுடன் இணைத்து விந்தணுக்களை கடத்த உதவும் இவை சுமார் 30 செ.மீ நீளமுள்ளவை.
விந்தணு முதிர்ச்சிப்பையினுள்(Epididymis) முதிர்ச்சியடைந்த விந்துக்களுக்கு பின்னர் எங்கு செல்கின்றன?
விந்து வெளியேற்றம் ஆரம்பமாகும் போது(When ejaculation occurs),
ஒரு ஆண் பாலியல் ரீதியாக கிளர்ச்சியடைந்து புணர ஆரம்பிக்கும் போது அல்லது சுய இன்பம் செய்யும் போது,
விந்தணு முதிர்ச்சிப்பையினுள் முதிர்ச்சியடைந்த விந்துக்கள் அதிக அழுத்தத்துடன் Vas Deferens (VAS DEF-uh-runz/விந்துக் குழாய்), or Sperm Duct(ஆண் பிறப்புறுப்புக்கு விந்து எடுத்துச் செல்லும் இழை நாளம்) இனுள் செலுத்தப்பட்டு தற்காலிகமாக சேமிக்கப்படும். பின்னர் தேவை ஏற்படும்(ஆண்குறியை உருவி/Pump செய்வது போல முன்னும் பின்னும் அசைத்து, விந்தினை வெளியேற்ற இறைத்தல் - நீர்ப்பம்பி தொழிற்படுவது போல) போது Vas Deferens குழாயானது விதைப்பையை(Scrotum) விட்டு விந்தணுக்களை வெளியே எடுத்துச் செல்லும்.
விந்துப்பாய்மம்(Semen) எங்கு, எப்படி உருவாகிறது?
சுக்கிலச் சுரப்பி என்பது ஆண்களுக்கு மாத்திரம் உள்ள ஒரு சுரப்பியாகும். அது பாதாம் விதையின் அளவிலானதுடன் சிறுநீர்ப்பையின் கழுத்துக்கு அடியில்(சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேறும்) மூத்திரக் குழாயைச் சுற்றவர இருக்கிறது.
Seminal Fluid என்பது Seminal Vesicle(விந்து இருப்புப்பை, விந்து கொள்ளகம், விந்து நுண்பை) மற்றும் Prostate Gland(சுக்கிலச் சுரப்பி/பிராஸ்டேட் சுரப்பி) இனால் உருவாக்கப்படும் ஒரு பால்(Whitish Fluid) போன்ற திரவமாகும்.
Seminal Vesicle இல் உருவாகும் விந்துப் பாய்மத்தின் ஒரு பகுதியில் விந்துக்களுக்கு ஊட்டத்தை அளிக்கக் கூடிய Sugar Fructose, Proteins, Citric Acid, Inorganic Phosphorus, Potassium, and Prostaglandins போன்றவை அடங்கியிருக்கும்.
Seminal Vesicle/Seminal Glands/Vesicular Glands விந்துக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை மாத்திரமல்லாது, பெண்குறியினுள் விந்து நுழையும் போது உருவாகும் ஒரு வித அமிலத்தன்மையை சரி செய்யக் கூடிய இரசாயணங்களையும் உருவாக்குகிறது.
Prostate Gland ஆனது விந்துக்களுக்கு ஊட்டத்தை அளித்து அவை நீந்தக் கூடியவகையிலான திரவத்தை உருவாக்கி Seminal Vesicle இனால் உருவான விந்துப் பாய்மத்தின் ஒரு பகுதியுடன் கலக்கப்பட்டு அவை விந்துப் பாய்மமாக(Semen) முழுமை பெறும்.
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள்(Bulbourethral Glands) ஆண்களின் உடலில் காம உணர்வுகள் உருவாகும் போது Precum(Pre-ejaculate fluid called Cowper's fluid) யை உற்பத்தி செய்யும். இது ஒரு இயற்கையான உராய்வு நீக்கி(Lubricant) திரவமாகும். இதுவும் விந்துப் பாய்மத்துடன்(Ejaculation இற்கான கலவையை தயாரிக்கும் போது அதில் கலக்கலாம்) கலக்கப்படும், அல்லது தனியாக, கலவியின் ஆரம்பத்தில் ஆண்குறியில் இருந்து கசிந்து, கலவியில் ஈடுபடும் போது புணர்ச்சிக்கு தயாராக இருப்பதை ஆணுக்கு உணர்த்தும். Pre-Cum இலும் விந்தணுக்கள்(ஏற்கனவே வெளியேறிய, விந்துக் குழாய்களில் தேங்கியிருக்கும்) இருக்கலாம். அதன் காரணமாகவே, தேவையற்ற கர்ப்பத்தை தவிப்பர்தற்காக ஆண்குறியை பெண்குறியினுள் நுழைக்கும் போதே ஆணுறையை அணிந்திருப்பது அவசியமாகிறது.
விந்துக்களுடன் எங்கு விந்துப்பாய்மம் கலக்கப்படுகிறது?
அவ்வாறு விதைப்பையை விட்டு வெளியே Vas Deferens குழாய்களினூடாக எடுத்துச் செல்லப்படும் விந்தானது மேலும் பல குழாய்களூடாக இடுப்புக் குழியில்(Pelvic Cavity) உள்ள விந்து வடத்திற்கு(Spermatic Cord) கொண்டு செல்லப்பட்டு, சிறுநீர் குழாய்க்கு(Ureter) மேலாக சிறுநீர் பையின்(Bladder) பின்னால் உள்ள சுக்கில சுரப்பிக்குக்(Prostate/புரோஸ்டேட்) கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது Vas Deferens ஆனது முதலில் Seminal Vesicle(செமினல் வெசிகல்/சுக்கிலப்புடகங்கள்) லுடன் இணைந்து விந்து வெளியேற்றும் குழாயாக(Ejaculatory Duct) உருவாகும். அப்போது விந்துப்பாய்மத்தின் ஒரு பகுதி விந்துடன் கலக்கப்படும். பின்னர் அது சுக்கில சுரப்பியின்(Prostate/புரோஸ்டேட்) ஊடாக சிறுநீர் குழாய்க்கு(Urethra) கொண்டு செல்லப்படும் அப்போது விந்துப்பாய்மத்தின் மற்றைய பகுதி அந்தக் கலவையில் கலக்கப்படும்.
அவ்வாறு விந்துக்கள்(Sperm) கலக்கப்பட்ட விந்துப் பாய்மமானது(Semen) ஆண் உச்சகட்டத்தை அடையும் போது உடலை விட்டு ஆண்குறியினூடாக வெளியேற்றப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு ஆணினால் விந்து வெளியேற்றப்படாத நிலையில் அது 74 நாட்களுக்கு மனித உடலினுள் சேமிக்கப்பட்டிருக்கும். பின்னர் இறந்த விந்தணுக்கள் உடலினால் அகத்துறிஞ்சப்படும்.
மனித உடலில் விந்து உற்பத்தி செய்யப்படும் படிமுறை மூலம்(Spermatogenesis) விந்து உற்பத்தி செய்ய 64 - 72 நாட்கள் ஆகும். உற்பத்தியான விந்துக்கள் முதிர்ச்சியடையும் வரை சில வாரங்களுக்கு(14 நாட்கள்) விந்தணு முதிர்ச்சிப்பையினுள்(Epididymis) சேமிக்கப்பட்டிருக்கும். Epididymis இனுள் விந்துக்கள் முதிர்ச்சியடைவதோடு, அவை நீந்தவும் பழகும்.
பெண்குறியினுள் பாய்ச்சப்பட்ட விந்தானது குறைந்தது 3-5 நாட்கள் உயிர்வாழும்.
வயதுக்கு வந்த ஆண்களால் விந்து வெளியேற்றாமல் எவ்வளவு நாட்கள் இருக்க முடியும்?
நிறைகுடம் நிரம்பினால் தளும்பும்(வழியும்). கூடியது 15 - 20 நாட்கள்(2-3 Weeks) ஆண்களால் விந்து வெளியேற்றாமல் மிகுந்த சிரமத்துடன் விந்தினை அடக்கி இருக்க முடியும். ஆனால் அதன் பின்னர் இயற்கையாகவே ஈரக் கனவுகள்('nocturnal emissions' or 'wet dreams' or 'sex dream', or 'sleep orgasm' - சிறுநீர் கழிப்பது போன்ற கனவு அல்லது கலவியில் ஈடுபடுவது போன்ற கனவு - ஹோர்மோன் மாற்றங்கள் அல்லது வேறு காரணங்களால் தூக்கத்தில் ஏற்படும் பாலியல் தூண்டலுக்கான துலங்கல்) மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறும் அல்லது இறந்த விந்தணுக்கள் உடலினால் அகத்துறிஞ்சப்படும். இது ஆணுக்கு ஆண் வேறுபடும்.
அதே நேரம் இது விதைகளினுள் புதிய விந்துக்களை சேமிக்க இடப்பற்றாக்குறை("space problem") ஏற்படுவதனால் நிகழ்வதாக விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகாவிட்டாலும், அதிகம் செக்ஸ் அல்லது சுய இன்பம் செய்யாத ஆண்களின் உடலில் தேங்கி நிற்கும் விந்துக்களை, விந்துப் பாய்மத்திரவத்தை வெளியேற்றக் கூடிய இயற்கையான பொறிமுறையாக கருதலாம்.
11 - 12 வயதின் பின்னர் பசங்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேற ஆரம்பிக்கும். சிலருக்கு முன்ன/பின்ன ஆகலாம்.
Suggestion:
[18+]ஆண்குறியில் இருந்து வெளியேறும் விந்து எப்படி இருக்கும்?
Recommended:
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்