Skip to main content

Posts

Showing posts with the label Pregnancy

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள், உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் அன்பின் மொழி பேசுங்கள் அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே, ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல.. அது அன்பின் மொழி, உணர்வுகளின் பறிமாற்றம், மற்றும் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம் ஆகும்.  உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம்(நீந்துவதன் மூலம்) பெண்ணின் முட்டையைச் சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்...

ஆண்கள் காண்டம் எப்படி பயன்படுத்துவது?

உடலுறவின் போது கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை தடுப்பதற்கான மிகவும் பாதுகாப்பான, பக்க விளைவுகள் அற்ற கருத்தடை சாதனம் காண்டம்(Condom) ஆகும். இதனை தமிழில் ஆணுறை என்று அழைப்பர். யோனியினுள் ஆண்குறியை செலுத்தி கலவியில் ஈடுபடும் போது குழந்தை உருவாகும் வாய்ப்பைத் தவிர்க்கவும், ஆசன வாய்வழிப் பாலுறவில் உள்ள சுகாதாரப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காகவும் ஆண்கள் பொதுவாக காண்டம் பயன்படுத்துவர். கருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன. ஆணுறைகள் ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும் போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது. கருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும்.  விபச்சாரிகள், முன் பின் அறிமுகமில்லாத நம்பிக்கையற்ற(ஆண்/பெண்) பாலியல் துணைகள...