ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது.
என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.
அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும். அக்காலத்தில் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டால், ஆணின் விந்துக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினூடாக நீந்தி கருமுட்டையைச் சென்றடைகின்றன.
உடலுறவு கொள்வதற்கு முன்னர் கர்ப்பப்பை வாய் சளி(Cervical Mucus) தொடர்பில் அவதானிக்க வேண்டும். பொதுவாக சூலகத்தில் இருந்து முட்டை வெளியேறுவதற்கு 2-3 நாட்கள் முன்னரில் இருந்து கர்ப்பப்பை வாய் சளி நன்கு ஈரலிப்பாக, வழுக்கக் கூடிய வகையில், கோழி முட்டையின் வெள்ளைக்கரு(Egg Whites) போன்று இருக்கும்.
பெண்குறியினுள் ஆழமாக விரலை விட்டு அதனைப் பரிசோதிக்க முடியும். கர்ப்பப்பை வாய் சளி ஈரலிப்பாக இருப்பதைக் கண்டவுடன் உடலுறவு கொள்வதை தீவிரப்படுத்தவும்.
ஆண்களின் விந்தணுக்கள்(Sperm), பெண்களின் கருப்பப்பை வாயில் உள்ள ஆரோக்கியமான சளியினுள் 3-5 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கும். ஆகவே கரு முட்டை வெளியேறும் தினத்திற்கு 2-3 நாட்கள் முன்பும், கரு முட்டை வெளியேறும் தினத்தன்றும் அவசியம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்.
Note: மாதவிடாய் சக்கரமானது பெண்களுக்கு பெண்கள் வேறுபட்டாலும், Calendar Based Ovulation Calculator இன் உதவியுடன் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதிகூடிய கருகட்டலுக்கான வாய்ப்பைக் கொடுக்கக் கூடிய(Fertile Window) அந்த 6 நாட்களை இனங்காணக் கூடியதாக இருக்கும். அந்த நாட்களில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அந்த நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் காண்டம் போடாமல் உடலுறவு வைத்துக் கொண்டால் கூட கர்ப்பமடைவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கும்.
மனைவிக்கு கருமுட்டை வெளியேறும் நாள் நெருங்கும் வரை ஆண்கள் விந்துக்களை சுய இன்பம் செய்யாமல், செக்ஸ் பண்ணாமல் சேகரித்து வைத்திருக்கக் கூடாது. பழைய விந்துக்களை விட புதிய விந்துக்கள் தான் குழந்தை உருவாக்கத்திற்கு தரமாக இருக்கும். ஆகவே அவசியம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டிய நாளை நெருங்கும் வரை குறைந்தது 3 நாட்களுக்கு ஒரு முறை கலவியில் ஈடுபட்டோ அல்லது சுய இன்பம் செய்தோ விந்தினை வெளியேற்றவும்.
கருப்பப்பை வாயின் சளியின் நிலை உங்களுக்கு எப்போது சூலகத்தில் இருந்து மூட்டை வெளியேறப் போகின்றது என்பதை சுட்டிக் காட்டும். சூலகத்தில் Ovarian follicles எனப்படும் திரவம் நிரப்பப்பட்ட சிறிய பைகள் போன்ற அமைப்பானது(Small Sacs filled with fluid) ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹோர்மோனை சுரக்கும்.
ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகரிக்கும் போது கருப்பப்பையின் வாயில் சளி உற்பத்தியை தூண்டுகிறது. மூட்டை வெளியேறும் நாளை நெருங்கும் போது அதன் அளவு அதிகரிக்கும். அதன் தன்மையானது கருவுறல் இடம்பெறாத காலத்தில், சளி இருக்கும் அடையாளமே தெரியாமல்(None) போகலாம் அல்லது பசை(Pasty) போன்று மாறியிருக்கலாம்.
ஆனால் கருவுறல் இடம்பெறக் கூடிய முட்டை வெளியேறும் காலத்தில் அல்லது அதற்கு அண்மையான காலத்தில் அந்த கருப்பப்பையின் வாயில் உள்ள சளி போன்ற தன்மையானது இழுபடக் கூடிய, அல்லது ஒட்டும் தன்மையானதாக இருக்கும். முட்டை வெளியேறும் காலத்தில் கருப்பப்பையின் வாயில் உள்ள சளி, பச்சையான கோழி முட்டையின் வெள்ளைக் கரு(Raw Egg White Consistency) போன்ற நிலையில் இருக்கும். ஒரு ஆணின் விந்தணுவுக்கு கருப்பப்பையினுள் நுழைந்து ஒரு முட்டையைச் சென்றடைவதற்கு இந்த கருப்பப்பையின் வாயில் உற்பத்தியாகும் சளி(Raw Egg White Consistency) அவசியமாகும்.
பெண்களுக்கு கருமுட்டை வெளியேறும் போது உடல் வெப்ப நிலையில் அதிகரிப்பு(0.2°C) ஏற்படும். வேறு புறக்காரணிகள் தாக்கம் செலுத்தாத விடத்து அதனையும் உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு, முடிவுகளை எடுக்க(Decisions based on Temperature Data) பயன்படுத்தலாம்.
அதற்கு காலையில் எழுந்திருக்கும் போது நாக்கின் அடியில் Digital Thermometer பயன்படுத்தி வெப்ப நிலையை அளக்க வேண்டும். ஆனால் வேறு காரணங்களால் இதனை துல்லியமாக செய்ய முடியாது போகலாம்.
இந்த வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுவதற்குக் காரணம், சூலகமானது Estrogen சுரப்பதை நிறுத்தி விட்டு, Progesterone யை முட்டை வெளியேறிய பின்னர் சுரப்பதனால் ஆகும்.
பெண்களுக்கு கரு முட்டை வெளியேறி 6-12 மணித்தியாலங்களில் அதன் தரம் குறைவடைந்து கொண்டு சென்று கருக்கட்ட முடியாத நிலைக்குச் செல்லும். ஆகவே நேரம் முக்கியம் பிகிலு! நேரம் பார்த்து புள்ளிங்கோவை உள்ள விட்டிடுங்க.
ஒரு ஆரோக்கியமான ஆண் விந்து வெளியேற்றும் போது கிட்டத்தட்ட 30 மில்லியன் தொடக்கம் 1.2 பில்லியன் வரையான விந்தணுக்களை(Sperm Cells) வெளியேற்றுகிறான். ஆனால் அவை அனைத்தும் உடலுறவின் போது பெண்ணின் கரு முட்டையை நெருங்குவதில்லை. மிக மிகக் குறைவான விந்தணுக்களே பெண்ணின் முட்டையை நெருங்கும்.
கருமுட்டையை சென்றடையும் வழியிலேயே அநேகமான விந்தணுக்கள் வீரியம் குறைவால் செயலற்று போகலாம், அல்லது பெண்ணின் நோய் எதிர்ப்பு அமைப்பு(Immune System) விந்தணுக்களை நோய் கிருமிகள் என தவறாக கருதி Antisperm Antibodies மூலம் அழிக்கலாம்.
குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில், பெண்களின் முட்டை வெளியேறும் தினத்தை எதிர்பார்த்து கலவியில் ஈடுபட உள்ள ஆண்கள், அவசியம் ஆரோக்கியமான புது விந்துக்களை வைத்திருக்க வேண்டும். ஆகவே அந்த நாள் வரை 2-3 நாட்களுக்கு ஒரு முறை விதைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் விந்துக்களை ஏதாவது ஒரு வழியில் வெளியே கொட்டி விடவும்.
அதே போன்று சூலகத்தில் இருந்து முட்டை வெளியேறும் தினத்தை அண்மித்த காலத்தில் ஆண்மையை அதிகரிக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். முட்டை வெளியேறும் தினத்தன்று அல்லது அதற்கு 2-3 நாட்கள் முதல் உங்கள் மனைவியின் பெண்குறியை உங்கள் விந்தால் நிரப்பி வைக்க மறக்க வேண்டாம்.
பெண்களுக்கு கருமுட்டை வெளியேறும் தினத்தை எப்படி கணிப்பது? ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி(Menstrual Cycle) பொதுவாக 28 நாட்கள் நீடிக்கும். கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து அடுத்த முறை மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் வரையான காலம் மாதவிடாய் சுழற்சிக் காலம் ஆகும். தற்போதைய உங்கள் மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் இறுதி நாளில் இருந்து 14 நாட்களை கழிப்பதன் மூலம் அண்ணளவாக உங்களுக்கு சூலகத்தில் இருந்து முட்டை வெளியேறும் நாளை கணிக்க முடியும்.
பெண்களுக்கு மாதவிடாய் ஆனது அதிகமாக 5 நாட்களுக்கு நிகழலாம். அதன் போது போன மாதவிடாய் சுழற்சியின் போது கரு தங்குவதற்காக உருவாக்கப்பட்ட கர்ப்பப்பையின் சுவர் போன்ற அமைப்பு (Endometrium/Lining of the Uterus) சிதைக்கப்படும். அதே நேரம் சூலகத்தில் இருந்து, போன சுழற்சியின் போது உருவாக்கப்பட்ட follicles(கரு முட்டை உள்ளடங்கலாக) களும் வெளியேற்றப்படும். ஒவ்வொரு சுழற்சியின் போதும் இவை புதுப்பிக்கப்படும்.
கலவியின் போது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்புகும் விந்தானது, யோனி, அதைத் தொடர்ந்து கருப்பை வாய், கருப்பை வழியாக நீந்திச் சென்று பாலோப்பியன் குழாயை அடையும். அதேவேளை சூலகத்தில் இருந்து வெளியேறும் முட்டையும் பாலோப்பியன் குழாயை அடையுமாயின், விந்தானது அங்கே கருமுட்டையுடன் இணையும்.
கருமுட்டை விந்தணுக்களோடு பயணித்து இருந்தால் கருத்தரிக்கும் இல்லாவிட்டால்
கருமுட்டை சிதைந்து கருப்பை புறணி வழியாக வெளியேற்றப்படும். இந்த
அண்டவிடுப்பை சரியான முறையில் தெரிந்துகொண்டால் கருத்தரிப்பை
முயற்சிக்கவும் செய்யலாம், அல்லது கருவுறுதலை தடுக்கவும் செய்யலாம்.
கருப்பையினுள் சென்ற விந்துக்களில் ஏதாவது ஒன்று சூல்முட்டைக்குள் உள்புகுந்தால் கருக்கட்டல் நிகழ்ந்து கருத்தரிக்கும். ஒரு விந்து சூல்முட்டைக்குள் போன பின்னர், வேறு விந்துக்கள் அந்த முட்டைக்குள் உள்ளே போக முடியாது.
வெளியேறும் விந்தானது உடனேயே கருக்கட்டக் கூடிய இயல்பை முழுமையாகக் கொண்டிருப்பதில்லை. அவை நீந்திச் செல்லும்போது, பல மணித்தியாலங்களுக்கு அவற்றில் நிகழும் சில மாற்றங்களே, அவற்றைக் கருக்கட்டலுக்குத் தயார்ப்படுத்துகின்றன.
கருக்கட்டலின் போது ஒருமடிய விந்தும், ஒருமடிய கருமுட்டையும் இணைந்து இருமடிய நிலையிலுள்ள கருவணுவை உருவாக்குகின்றது. கருவணுவானது பின்னர் கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கும். அது கருப்பையை வந்தடைய 4-7 நாட்கள் எடுக்கும். அதேவேளை கருவணு தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உட்படும்.
ஆனாலும் கலவி நிகழாமலேயே செயற்கை விந்தூட்டல், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் போன்ற முறைகள் மூலம் கருத்தரிப்பு நிகழும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இம்முறைகள்(IVF, and IUI) ஏதாவது காரணங்களால், மலட்டுத்தன்மை இருக்கும் நிலையில் மேற்கொள்ளப்படும்.
செயற்கை விந்தூட்டல் மூலம் சூல்முட்டை வெளிவரும் காலத்தில் விந்து பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தப்படுவதன் மூலம், கருக்கட்டல் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அங்கே கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின் கருத்தரிப்பு நிகழும்.
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் ஆயின், வெளிவரும் முட்டைகள் பெண்ணின் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, வெளிச் சூழலில், அதாவது பரிசோதனைக் கூடத்தில், விந்துடன் கலக்கப்படும் போது, கருக்கட்டல் வெற்றிகரமாக நிகழுமாயின், கருக்கட்டப்பட்ட கருவணு அல்லது, முளைய விருத்திக்கு உட்படும் முளையம் மீண்டும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் வைக்கப்பட்டு, கருத்தரிப்பு நிகழும்.
Recommended: உங்களுக்கு எதை எங்க ஓட்டனும் என்று தெரியாதா? கணவனும் மனைவியும் உடலுறவு கொள்வது எப்படி? - அடிப்படை பாலியல் கல்வி
அவதானம்: ஆண்கள் தயவு செய்து கருப்பத்தடை மாத்திரைகளை(Birth Control Pills/Contraceptive Pills) பெண்களை எடுத்துக் கொள்ள அடிக்கடி கட்டாயப்படுத்தக் கூடாது. அதன் மூலம் பிற்காலத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க வேண்டி ஏற்படலாம். ஆண்களுக்கான ஆணுறைகள் மிகவும் சிறந்த பாதுகாப்பான, பக்கவிளைவுகள் ஆற்ற ஒரு கருத்தடை சாதனமாகும்.
Tips: கையில் காண்டம் இல்லாவிட்டால், ஆண்கள் பெண்களுடன் ஆசனவாய் வழிப் பாலுறவில்(Anal Sex) ஈடுபட்டும் தேவையற்ற(Unplanned) கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம். பாலியல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆசனவாய் வழிப் பாலுறவில் ஈடுபடும் போதும் அவசியம் ஆணுறை அணியவும். அதே நேறம் ஆசனவாயினுள் காண்டம் அணியாது நுழைத்த ஆண்குறியை அப்படியே எடுத்து பெண்குறியினுள் அல்லது வாயினுள் நுழைப்பதைத் தவிர்க்கவும்.
Keywords: In vitro fertilization (IVF) and intrauterine insemination (IUI) are both fertility treatments that help people conceive
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்