Skip to main content

Posts

Showing posts with the label Mutual Masturbation

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நண்பர்கள் கூட உங்களை தவறாக வழிநடத்தலாம்

ஆண்கள் பூப்படையும் போது அவர்களுக்குள்ளே ஒரு தேடல் ஆரம்பமாகும். இது இயல்பான ஒன்று. தமது உடலில் நிகழும் மாற்றங்கள், உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பானதாக அவை இருக்கும். அநேகமாக தனது வயதை ஒத்த வயதுடைய நண்பர்களிடம் இது பற்றி ஒழிவு மறைவில்லாமல் பேசுவார்கள் அதன் மூலம் ஒருவருக்கு இருக்கும் பாலியல், பூப்படைதல் தொடர்பான அறிவு மற்றவர்களுக்கும் பகிரப்படும். அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்களா? என்பதை முன்னர் சரிபார்க்க முடியாது இருந்தாலும், தற்காலத்தில் இருக்கும் இணையத்தளப் பயன்பாட்டின் ஆதிக்கத்தின் காரணமாக சர்வ சாதாரணமாக Google இல் தேடி, உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள முடியும், அதே நேரம் அவர்கள் உங்களிடம் பகிரும் விடையங்கள் தொடர்பான உண்மைத் தன்மையையும் சரி பார்க்க முடியும். இந்த இரண்டு முறைகளையும் விட இன்னும் சில முறைகளிலும் ஆண்கள்(சிறுவர்கள்) பூப்படைவது தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தனது வீட்டிற்கு அல்லது தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கும், அல்லது தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலில்(Hostel) இருக்கும் சீனியர்/யூனியர், வயது வந்த ஆண்களின்(இளைஞர்க...