Skip to main content

Posts

Showing posts with the label Male

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பூப்படையும் போது ஆண்களின் உடலில் தோன்றும் பருக்கள்

ஆண்கள் பூப்படையும் வயதினுள் நுழையும் போது பருக்கள் தோன்றும் பிரச்சனை ஆரம்பமாகும். முகத்தில் பருக்கள் தோன்றுவது பிள்ளைகள் வயதுக்கு வந்ததன் வெளிப்படையான அறிகுறியாகும். அதில் அவர்களின் பரம்பரை அலகுகள் செல்வாக்குச் செலுத்தினாலும், சிலருக்கும் ஒவ்வாமை, தவறான உணவுப் பழக்கங்களே பருக்களை தோற்று வித்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு அங்காங்கே பருக்கள் வந்து போகும். ஒரு சிலருக்கு அவை குணமாகும் போது நிரந்தரமான தழும்புகளையும் உருவாக்கிவிடுகின்றன. இதன் காரணமாகவே சிலருக்கு அவர்களின் முகத்தில், அநேகமாக கன்னங்களில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள்/பள்ளங்கள்/குழிகள்/வடு இருக்கும். முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் உள்ள ஆண்கள் ஆண்மை அதிகமான ஆண்களாக பார்க்கப்படுகின்றனர். இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும். பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். மேலும் சில பக்கவிளைவுகளையு...

ஆண்கள் காண்டம் எப்படி பயன்படுத்துவது?

உடலுறவின் போது கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை தடுப்பதற்கான மிகவும் பாதுகாப்பான, பக்க விளைவுகள் அற்ற கருத்தடை சாதனம் காண்டம்(Condom) ஆகும். இதனை தமிழில் ஆணுறை என்று அழைப்பர். யோனியினுள் ஆண்குறியை செலுத்தி கலவியில் ஈடுபடும் போது குழந்தை உருவாகும் வாய்ப்பைத் தவிர்க்கவும், ஆசன வாய்வழிப் பாலுறவில் உள்ள சுகாதாரப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காகவும் ஆண்கள் பொதுவாக காண்டம் பயன்படுத்துவர். கருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன. ஆணுறைகள் ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும் போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது. கருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும்.  விபச்சாரிகள், முன் பின் அறிமுகமில்லாத நம்பிக்கையற்ற(ஆண்/பெண்) பாலியல் துணைகள...