ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா "இல்லை". முஸ்லிம்களும் யூதர்களும், தமிழர்களில் ஒரு சாதிப் பிரிவினரும்(மார்க்க கல்யாணம்) தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை ஒரு சடங்காக ஆண்களுக்குச் செய்கிறார்கள்.
கட்டாயம் சிறு வயதில் தான் சுன்னத் செய்ய வேண்டும் என்று இல்லை. இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் Phimosis போன்ற மருத்துவக் காரணங்களுக்காகவும் சுன்னத் செய்யலாம்.
சுன்னத் செய்தால் அதிக சிரத்தை(Care) எடுக்காமல் ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும். மற்றும் படி அதில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதனை மருத்துவ உலகம் Cosmetic Surgery ஆகப் பார்க்கிறது.
சுன்னத் செய்த ஆண்களுக்கு விந்து முந்துதல்(சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை) குறைவாக இருக்கும் என்று ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும் அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
ஆண்கள் பலருக்கும் சிறுவயதில் விளையாட்டாய் தோன்றும் ஓர் சந்தேகம்!! பெண்கள் வயதுக்கு வந்தால் மட்டும் சடங்கு, சம்பரதாயம் எல்லாம் செய்கிறார்கள். ஆண்களுக்கு எதுவும் இல்லையா என்பது ஆகும். சிலர் பெற்றோர்களிடம் கேட்டே விடுவார்கள். ஆனால் பெற்றோர்கள் ஏதாவது சொல்லி சமாளித்து விடுவார்கள். உண்மையில் பெண்களைப் போல ஆண்களுக்கும் சடங்குகள் இருக்கின்றனவா எனக்கேட்டால் அதற்கான பதில்தான் மார்க்க கல்யாணம்.
பூப்பெய்திய பெண்ணுக்கு சடங்கு வைத்து அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என்று அறிவிப்பதைப் போல, ஆணுக்கும் சடங்கு வைத்து அறிவிப்பது தான் மார்க்க கல்யாணம்.
கல்யாணம் போலவே சொந்தபந்தங்கள் ஆசீர்வதித்து,மொய்வைத்து நடக்கும் மார்க்க கல்யாணத்தில் சம்பந்தப்பட்ட ஆண் சோகமாகவோ, வெட்கப்பட்டுக் கொண்டோ இருப்பான். அவன் வேட்டி, சட்டையுடன் இசை முழங்க முன்னே செல்ல, சொந்தங்கள் அனைவரும் சீர்வரிசையுடன் ஊர்வலமாக பின்னே வருவார்கள்.
ஊர்வலம் முடிந்து மறுநாள் அதிகாலையில் சம்பந்தப்பட்ட ஆணுடன் மற்ற ஆண்கள், நாவிதர்(தோலை நீக்கும் வைத்தியர்) இருக்கும் இடத்திற்க்கு சென்று அனைத்து உடைகளையும் கலைந்து, சம்பந்தப்பட்ட ஆண்யை குத்துக்கல்லில் காலை அகட்டி உட்காரவைத்து, அவனை மிசுங்கவிடாமல்(கண்டபடி அசையாது, எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் முரண்டு பிடிக்காது) பிடித்துக் கொள்வார்கள்.
அதன்பின் தான் நாவிதர் தன் வேலையை ஆரம்பிப்பார். அதற்கான நெறிமுறையானது தவறாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தவறினால் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். நாவிதரின் கணக்குப்படி அந்த உறுப்பில் மேல் நாடி நரம்பு, கீழ்நாடி நரம்பு, பக்க நரம்பு ஆகிய மூன்று விதமான நரம்புகள் உள்ளன. அந்த மூன்று நரம்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தோலை நீக்க வேண்டும்.
மூன்று நரம்புகளையும் கண்டுபிடித்து ஒதுக்கிவிட்டு தோலை மட்டும் தனியாக கட்டி விட்டு வெட்டுவார்கள். அதன் பின்னர் மருந்து கட்டி விடுவார்கள். இதில் சம்பந்தப்பட்ட ஆணின் வலியானது, அவர் மட்டுமே அறிந்த பெரும்வலியாக இருக்கும்.
இந்த மார்க்க கல்யாணத்திற்கு மருத்துவ காரணமும் உள்ளது. அந்த உறுப்பில் உள்ள நுனி தோலை(Foreskin) நீக்கிவிட்டால், அழுக்கு சேராமல் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
பல நாடுகளில் குழந்தை பிறந்த உடன், மருத்துவமனைகளிலேயே தோலை நீக்கி விடுகின்றனர். உலகத்தில் பல பழங்குடிகளிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப்பழக்கம், பிறமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது.
அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தை ‘கவரடைப்பு’ எனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்து விட்டது. இந்த மார்க்க கல்யாணம் அல்லது சுன்னத் எனும் வைத்தியத்தை மதம் சார்ந்த நம்பிக்கையாக மட்டுமே பார்க்க கூடாது என்பது தான் மருத்துவர்களின் வாதமும் கூட.
தமிழர்களிடம் காணப்பட்ட இந்த சடங்கினை மதயானைக் கூட்டம்(Madha Yaanai Koottam 2013) தமிழ் படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
சுன்னத் செய்யாத ஆண்கள் கவனத்திற்கு: 13 - 15 வயதிற்கு இடைப்பட்ட வயதில் உங்களுக்கு பசங்க இருந்தால், ஒரு தந்தையாக நீங்கள் அவனிடம் "உன்னால் உனது முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக உள்ளதா?" என்று விசாரிக்க வேண்டும். குளிக்கும் போது ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து அதில் படிந்துள்ள Smegma எனும் தோல் அழுக்கை, நீரில் அலசி சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உங்கள் பையனால் அவனது ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாவிட்டால் வைத்திய ஆலோசனை பெற்று, அவனுக்கு சுன்னத் செய்து விடுவது சிறந்தது. அதன் மூலம் அவனது உடல், உள ஆரோக்கியம் மேம்படும்.
நீங்கள் இவ்வாறு விசாரித்த பின்னர் தான் அவன் முயற்சித்துப் பார்ப்பதாக இருந்தால், பின்னர் உங்களிடம் வந்து அது தொடர்பில் நடந்ததை கலந்துரையாடச் சொல்லவும். அவனால், அவனது முன் தோலை பின்னால் நகர்த்தி அவனது ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருந்தால், அதனை நிச்சயம் கொண்டாடலாம்.
எப்படி கொண்டாடலாம்? அவனை கட்டியணைத்து வாழ்த்துக்கள் சொல்லலாம். அவனை கடைகளுக்குக் கொண்டு சென்று பூப்படையும் காலம் முதல் ஆண்களுக்கு அவசியம் தேவைப்படும் ஜட்டி முதல் Grooming Tools(Shaving Creams, Razors, Trimmer, etc) வரை அறிமுகம் செய்யலாம், அவற்றை வாங்கியும் கொடுக்கலாம். அவனை லுங்கி அணிய பழக்கலாம்.
Read More: ஒரு ஆண் முழுமையாக வயசுக்கு வந்ததன் அறிகுறி
ஆண்களின் ஆண்குறியின் மொட்டுப் பகுதி அதிக உணர்ச்சிமிக்கது. சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியின் மொட்டுப் பகுதி வெளியவே இருப்பதால், சில நாட்களுக்கு தளர்வான ஆடைகள் அணிய வேண்டும். இதனால் தான் முஸ்லிம் ஆண்கள் சிறுவயது முதலே லுங்கி கட்டத் துவங்கி விடுவர்.
காயம் ஆறிய பின்னர் முஸ்லிம் ஆண்கள் அவர்களின் ஆண்குறிக்கு தேங்காய் எண்ணெய் பூசுவார்களாம்.
சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியின் மொட்டு வெளியவே இருந்து காய்ந்து நிறம் மாறும். ஆண்குறியின் மொட்டில் பெரியளவில் உணர்ச்சி இருக்காது. சுய இன்பம் செய்வது கடினமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் அல்லது சவர்க்காரம் போட்டே முஸ்லிம் ஆண்கள் சுய இன்பம் செய்வார்கள். சுன்னத் செய்த ஆண்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாவிட்டாலும், சுய இன்பம் செய்வதில் அவர்களுக்கு திருப்தி ஏற்படாது.
சுன்னத் செய்த ஆண்களை விட சுன்னத் செய்யாத ஆண்களுக்கே சுய இன்பம் செய்யும் போது அதிக சுகம், இன்பம் கிடைக்கும். சுன்னத் செய்யாத ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு எப்பவும் Fresh ஆக ஒரு ரோஜாப்பூ போல இருக்கும்.
சுய இன்பம் செய்வதைக் கட்டுப்படுத்தவே சுன்னத் செய்யும் கலாச்சாரம் உருவானதாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
தற்காலத்தில் கத்தி வைக்காமலேயே சுன்னத் செய்யும் வழிமுறைகள் மருத்துவத் துறையில் வந்து விட்டது. லேசர் சத்திர சிகிச்சை மூலம் சுன்னத் செய்து கொண்டால், சுன்னத் செய்த அன்றே கூட வீடு திரும்பலாம். காயம் குறைந்தது 5 நாட்களில் முழுமையாக ஆறி விடும். இருப்பினும், ஆண்குறியின் மொட்டு வெளியே இருக்க பழக்கப்பட சிறிது காலம் தேவைப்படலாம்.
Phimosis(முன் தோல் குறுக்கம்), நீண்ட முன் தோல் போன்ற ஏதாவது மருத்துவக் காரணத்திற்காக சுன்னத் செய்வதாக இருந்தால் ஒரு நல்ல வைத்தியரிடன் ஆலோசனை பெறவும்.
ஆண்களுக்கு எத்தனை வயதில் சுன்னத் செய்ய வேண்டும்? பூப்படைந்த ஆண்களுக்கு, இளைஞர்களுக்கு சுன்னத் செய்யலாமா?
பொதுவாக 3 - 7 வயதில் அல்லது பூப்படையும் வயதிற்கு முன்னர்(10 - 13 வயது) முஸ்லிம்கள் தமது பசங்களுக்கு சுன்னத் செய்வார்கள். அதற்காக கட்டாயம் சிறுவர்களாக இருக்கும் போது மாத்திரம் தான் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்க முடியும் என்றில்லை. எத்தனை வயதிலும் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்க முடியும். வெளி நாடுகளில் குழந்தை பிறந்தவுடன் கூட சுன்னத் செய்வார்கள்.
மருத்துவக் காரணங்களுக்காக அல்லது மத நம்பிக்கைகாக நீங்கள் சுன்னத்(Circumcision) செய்ய விரும்பினால், ஒரு வைத்தியரின் உதவியுடன் உங்கள் ஆண்குறியின் மூன் தோலை நீக்கவும்.
குறிப்பு: ஆண்களின் ஆண்குறியின் முன் தோலில்(Foreskin) வீக்கம், கட்டெறும்பு கடித்தும் வரலாம், அலர்ஜி, தோற்றுகளினாலும் வரலாம். அநேகமாக அவை தற்காலிகமானவை. நீண்ட நாட்களாகியும் அது சரியாகா விட்டால் ஒரு வைத்தியரை நாடவும்.
பதிவுச் சுருக்கம்
பிறப்பிலேயே சில ஆண்களுக்கு அவர்களது ஆண்குறியில் முன் தோல்(Foreskin) வளர்ச்சி இருக்காது. இந்த நிலைமையை Aposthia என்பர். இவர்கள் இயற்கையாகவே சுன்னத் செய்யப்பட்ட ஆண்கள். இவர்கள் Cut ஆண்கள்.
மத நம்பிக்கை அல்லது மருத்துவக்(Phimosis, Balanitis, மேலும் பல) காரணத்திற்காக ஆண்குறியின் முன் தோலை அகற்றும் ஆண்கள் சத்திர சிகிச்சை மூலம் சுன்னத்(Circumcised) செய்த ஆண்கள். இவர்கள் Cut ஆண்கள்
சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோல் குறுகியதாக இருக்கும். இதன் காரணாமாக ஆண்குறி புடைத்தெழும் போது அதன் மொட்டு முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வெளியே வந்து விடும். இவர்கள் சுன்னத் செய்த ஆண்கள் கிடையாது. ஆனால் இவர்கள் ஆண்குறியும் சுன்னத் செய்த ஆண்குறி போலவே இருக்கும். இவர்கள் Uncut ஆண்கள்.
சில ஆண்களுக்கு அவர்களின் முன் தோல் முழுமையாக அகற்றப்படுவதில்லை. தும்பிக்கை போல நீளமான முன் தோலை உடைய ஆண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பகுதியளவில் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை வைத்தியர்கள் நீக்குவதும் உண்டு. இவர்கள் Partial Circumcised/Semi Cut ஆண்கள். ஆண்குறியில் முன் தோலை உடைய ஆண்கள் Uncut ஆண்கள்.
Read More: பெண்களுக்கு அதிக சுகத்தைக் கொடுக்கும் ஆண்குறியின் முன் தோல்(Read More)
வயதுக்கு வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள்(மேலும் படிக்க)
Keywords: Naturally Cut, Aposthia, Circumcised, Cut, Uncut, Foreskin, Partial Circumcised, Semi Cut
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்