Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பூப்படையும் போது ஆண்களின் உடலில் தோன்றும் பருக்கள்

ஆண்கள் பூப்படையும் வயதினுள் நுழையும் போது பருக்கள் தோன்றும் பிரச்சனை ஆரம்பமாகும். முகத்தில் பருக்கள் தோன்றுவது பிள்ளைகள் வயதுக்கு வந்ததன் வெளிப்படையான அறிகுறியாகும். அதில் அவர்களின் பரம்பரை அலகுகள் செல்வாக்குச் செலுத்தினாலும், சிலருக்கும் ஒவ்வாமை, தவறான உணவுப் பழக்கங்களே பருக்களை தோற்று வித்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

Male Puberty

Acne and Pimples

சிலருக்கு அங்காங்கே பருக்கள் வந்து போகும். ஒரு சிலருக்கு அவை குணமாகும் போது நிரந்தரமான தழும்புகளையும் உருவாக்கிவிடுகின்றன. இதன் காரணமாகவே சிலருக்கு அவர்களின் முகத்தில், அநேகமாக கன்னங்களில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள்/பள்ளங்கள்/குழிகள்/வடு இருக்கும். முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் உள்ள ஆண்கள் ஆண்மை அதிகமான ஆண்களாக பார்க்கப்படுகின்றனர்.

இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும். பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். மேலும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் தழும்பு உண்டாகும் என்பது பரவலான கருத்து. ஆனால் அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே(Cystic Acne). பாரம்பரியமாகத்(Genetic) தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிகமாக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும்.

சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும் கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே ஒரு தோல் வைத்தியரை(Skin Doctor) அணுகி, அதற்கான மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். 

Acne பிரச்சனை உள்ளவர்கள் எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது. Vitamin C அதிகமான உணவுகளையும், பாலில் செய்த உணவுகளியும், Gluten உள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எந்த உணவு உண்ணும் போது அதிக ஏற்படுகிறதோ அவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டு.

தழும்புகளை வீட்டு வைத்தியங்கள் மூலமும் நீக்கலாம். ஆனால் அதிக காலம் எடுக்கும்.

பருக்கள் பொதுவாக நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். சருமத்தில் ஏதேனும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், சரும எண்ணெய் வெளியேற முடியாமல் அடைப்பு இருக்கும் போது பருக்கள் ஏற்படுகிறது. தோள்பட்டை, கழுத்து, கைகள், கால்கள், அந்தரங்க பகுதி இப்படி மற்ற இடங்களிலும் பருக்கள் வருகின்றன. சில பருக்கள் நிரந்தரமானவ, சில பருக்கள் தற்காலிகமானவை.

ஆண்களுக்கு உடல் முழுவது உரோம வளர்ச்சி இருக்கும். அதன் காரணமாக சீழ் வைத்த(Pus Filled) பருக்கள்(Ingrown Hair - முடி தோலுக்குள்ளேயே வளருதல்) உடலின் எந்த பாகத்திலும் வரலாம். உதாரணமாக விதைப்பை, ஆண்குறியின் தண்டு, அடிவயிறு, ஆசனவாய்க்கு அருகில், முகம், கழுத்து, முதுகு போன்ற உடல் உறுப்புகளில் இவ்வாறான பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள். இதனை விஷப்பருக்கள் என்றும் சொல்லலாம். விஷப்பருக்கள் என இவற்றை அழைக்கக் காரணம் இவை மிகவும் வலியை ஏற்படுத்தக் கூடியவை. அதே நேரம் உணவு ஒவ்வாமைகளினாலும், அலர்ஜிகளினாலும் கூட இந்தப் பருக்கள் உருவாகும். இந்தப் பருக்களை பழுக்க முன்னர்(சீழ் வெளிவரக் கூடிய நிலைக்கு வர முன்னர்) சாதாரண பருக்கள் போல உடைக்க முயற்சித்தால் வீங்கும். அந்த இடம் சிவப்பாகும். வலியும் அதிகமாகும்.

பருத்தித் துணி அல்லாத அல்லது வேறு துணி வகைகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் அணியும் போது ஏற்படும் அதிக எரிச்சல், வியர்வை காரணமாகவும், சுத்தமான உள்ளாடைகள் அணியாமையினாலும், மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதனாலும் அந்தரங்கப் பகுதிகளில் விஷப்பருக்கள் தோன்றுவதுண்டு.

Note: சீழ் வைத்த பருக்களினுள் இருந்து சீழ் முழுமையாக வெளியேற்றப்படும் வரை அவை ஆறாது.

இந்த விஷப் பருக்களைத் (தெரியாமலோ/Accidentally) நகத்தாள் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தையே கூட ஏற்படுத்தி விடும். இத்தகைய விஷப்பருக்கள் தோன்றினால் யாரும் கவலைபடத் தேவையில்லை. திருநீற்றுப்பச்சை இலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேளை தடவினால் போதும் பரு காய்ந்து கொட்டிவிடும். இந்த பருக்கள் மீது சந்தணம் தடவி வந்தால் அவை சீக்கிரம் பழுக்கும் நிலைக்கு வந்து விடும். அதனால் ஏற்படும் நோவும் குறையும்.

ஆண்கள் Full Shave செய்யும் போது முடி வளரும் திசைக்கு எதிர்த் திசையில் ஆரம்பத்திலேயே Shave(Shaving against the grain) செய்யும் போது Ingrown Hair பிரச்சனை அடிக்கடி ஏற்படும். ஆண்கள் தாடி, மீசையை மழிக்கும் போதும், ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடிகளை மழிக்கும் போதும் ஆரம்பத்தில் முடி வளரும் திசையிலேயே மழிக்கவும். பிறகு தேவை ஏற்பட்டால் முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் மழிக்கவும்.



பருக்கள் அதிகமான ஆண்கள் தாடி, மீசை, சுன்னி முடி போன்றவற்றை மழிப்பதை விட Trim செய்வது சிறந்தது.

ஆண்களுக்கு ஆண்குறியின் மொட்டின் கழுத்தின் கீழ் பகுதியில்(Corona) முத்துக்கள்/பருக்கள் போன்ற அமைப்பு கோர்வையாக/சங்கிலி போல இருக்கும். அவை பருக்கள் கிடையாது. ஆண்குறியின் ஒரு பகுதியாகும். ஆண்குறியின் தலைப்பகுதியை காயாமல் வைத்திருக்க உதவும் எண்ணெய் சுரப்பிகளாகும். எல்லாம் ஆண்களுக்கும் இருக்கும். ஆனால், அவை வெளித்தெரியாது. ஒரு சிலருக்கே அவை வெளித்தெரியும். இதனை Pearly Penile Papules(PPP) என்பர். Pearly Penile Papules(PPP) பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

இந்த எண்ணெய் சுரப்பிகள்(Sebaceous Glands) ஆண்குறியின் தண்டு(Shaft), விதைப்பைகளிலும்(Scrotum) இருக்கும். ஆனால் அவை ஆண்குறியின் நிறத்தை விட சற்று வெளிர் நிறமாக(Light Colors) இருப்பதால் பார்ப்பதற்கு புள்ளிகள் போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை உங்கள் உடலின் ஒரு பாகமாகும்.

Keywords: குண்டில கட்டு, சூத்துல கட்டி

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...