Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் வியர்வையை, அகத்துறிஞ்சாது தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அணியும் ஆண்களுக்கும், தோய்க்காத/வியர்வையில் ஊறிய ஜட்டிகளை மீண்டும் மீண்டும் அணியும் ஆண்களுக்கும், உடற்பயிற்சி/விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் குளிக்காத ஆண்களுக்கும், குளித்த பின்னர் உடலில் உள்ள ஈரத்தை ஒழுங்காக உலர்த்தாது உள்ளாடைகள் அணியும் ஆண்களுக்கும், ஏற்கனவே Jock Itch இருக்கும் நபரின் ஜட்டி, பனியன், போன்ற உள்ளாடைகளை அணிவதன் மூலமும், அல்லது அவர் பயன்படுத்திய ஆடைகளை தோய்க்காமல் பயன்படுத்துவதன் மூலமும் அந்தரங்கப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். இதனை Jock Itch என ஆங்கிலத்தில் அழைப்பர்.

Male Puberty

Jock Itch Explained in Tamil

சில ஆண்களுக்கு அவர்களின் ஜட்டியைத் துவைக்கப் பாவிக்கும் சவர்க்காரம், அல்லது Detergent Powder சருமத்திற்கு ஒத்துவராததன் காரணமாக, அலர்ஜியாகக் கூட இந்த மாதிரி அரிப்புகள் ஏற்படலாம். திடீரென இவ்வாறான அரிப்பு ஏற்பட்டால், அண்மையில் நீங்கள் பயன்படுத்தும் சவர்க்காரம்/சலவைத்தூளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்பதையும் அவதானிக்கவும்.

பொதுக்கழிப்பறைகளை(Public Toilets) அவதானத்துடன் பாவிக்கவும். பொதுக் கழிப்பறைகளைப் பாவிப்பதன் மூலமும் Jock Itch ஏற்படும். Squatting Pan இல் குந்தியிருக்க முன்னர் நன்றாக தண்ணீர் ஊற்றி Flush செய்யவும். Western Toilet யைப் பயன்படுத்தும் போது அவற்றின் விளிம்புகளை நன்கு சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். அநேகமாக Western Toilet/Commode இல் உட்கார்ந்து இருந்து மலம் கழிக்கும் போது இந்தத் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகமாகும்.

Jock Itch ஆனது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுகை மூலம், குறிப்பாக ஈரலிப்பான நிலைமையில்(skin-to-skin contact, especially in warm, damp environments) பரவக் கூடியது. முன், பின் அறிமுகமில்லாத நபர்களுடன் உடலுறவு கொள்ளும் போதும் இந்த பிரச்சனை தொற்றிக் கொள்ளலாம்.

இது காண்டம் அணிந்து பாலியல் உறவில் ஈடுபட்டாலும் பரவும். அதற்குக் காரணம் இது பால்வினை நோய்(STD) அல்ல. அந்தரங்கப் பேன்(Crab louse/Pubic Lice) எப்படி தொடுகையில் மூலம் பரவலடையுமோ அது போல இது இருவரது தோல்களுக்கிடையிலான தொடுகையின் மூலம் பரவலடையும். இது முழுமையாக குணப்படுத்தக் கூடிய தோல் தொற்று நோய் நிலைமையாகும்.

தொடைகளில்(பொதுவாக Inner Thighs​)/தொடை இடுக்குகளில்(Groin), விதைகளுக்கு அடிப்பகுதியிலும் அரிப்பு, தோல் சிவப்பாக மாறுதல், எரிச்சலாக இருத்தல், நோவு போன்றன ஏற்படல். அதுவும் குறிப்பாக ஜட்டியின் கால் ஓட்டைகள்(Leg Openings) இருக்கும் இலாஸ்டிக் பட்டிகளை அண்டிய பகுதிகளில் வலியை உணரக் கூடியதாக இருத்தல். பொடுகு போல உலர்ந்த தோல்கள் வெளிக்கிளம்புதல், தோல் கறுப்பாக மாறுதல், வட்ட வடிவில் சொறி(Ring like Rash) ஏற்படுதல் போன்றவற்றை அறிகுறிகளாக கூறலாம். இதனை Tinea Infections எனவும் அழைப்பர்.

உங்களுக்கு ஏற்பட்டிருப்பது Jock Itch ஆக இருந்தால், அந்தப் பகுதியை உலர்வாகவும், அடிக்கடி சவர்க்காரம்(கிருமி நீக்கும்: உதாரணம் Lifebuoy, Dettol Soap, etc.​) போட்டு கழுவி சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும், வைத்தியரினால் பருந்துரை செய்யபட்ட over-the-counter (OTC) Antifungal Cream, Powder, or Spray போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும், நமது சமூகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் Itch Guard, Saibol போன்றவற்றை அவதானமாக பாவிப்பதன் மூலமும் Jock Itch யைக் கட்டுப்படுத்தி சரி செய்யலாம்.

உங்கள் அந்தரங்கப் பகுதிகளை எப்போதும் உலர்வாக வைத்திருக்கவும்.

Jock Itch இனை குணப்படுத்த ஒரு வைத்தியரை நாட வேண்டுமா? கை வைத்தியங்கள், இணையத்தளங்களில் தேடிப் பெற்ற குறிப்புகளை பின்பற்றியும் அது சரியாகவில்லை என்றால் கட்டாயம் ஒரு தோல் வைத்தியரின்(Dermatologist) உதவியை நாட வேண்டும். 

சுத்தமான, உலர்ந்த பருத்தி உள்ளாடைகள் அணியவும்.
 

அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புப்பை சரி செய்யும் வீட்டு வைத்தியம்/கை வைத்தியம்:

Home Remedies for Jock Itch (Click the image to enlarge it)

அரிப்பு ஏற்படும் பகுதியில்,
வெட்டிய வெங்காயத்தால் தேய்ப்பதன் மூலமும்  Jock Itch யைக் கட்டுப்படுத்தலாம். Corn Starch பூசுவதன் மூலமும் Jock Itch யைக் கட்டுப்படுத்தலாம். தயிர் பூசுவதன் மூலமும் Jock Itch யைக் கட்டுப்படுத்தலாம்.

இவற்றைத் தவிர Jock Itch இனால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை நன்கு சுத்தம் செய்து உலர்த்திய பின்னர் கற்றாழை, தேங்காய் எண்ணெய், Vaseline போன்ற பெற்றோலியம் ஜெலி, உள்ளி/பூண்டினை அரைத்து பூசுவதன் மூலம், தேன், Tea Tree Oil, வேப்பிலையை அரைத்து, Apple Cider Vinegar போன்றவற்றை பூசி வருவதன் மூலம் கிரமமாக கட்டுப்படுத்தி குணப்படுத்தலாம்.

அவதானம்: Jock Itch, இடுப்புக்குக் கீழே பரவலடையக் கூடியது. கண்ட கண்ட நேரங்களில் அரிப்பை ஏற்படுத்தி உங்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கும். இது சிலருக்கும் கால் விரல்களிலும் ஏற்படும். சிலருக்கு உணவு ஒவ்வாமைகளினாலும் ஏற்படும்.

Drying Men Underwear after Laundry

Men Underwear Drying

Men Used Underwear Collection

Keywords: வட்டக் கடி, கக்குஸ் பத்து, ஜட்டி அணியும் போது அரிப்பு, ஆண்களுக்கு ஏற்படும் அரிப்பு, சுன்னி முடியை அண்டைய பகுதியில் அரிப்பு

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...