Skip to main content

Posts

Showing posts from March, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் கட்டாயம் சுன்னத் செய்ய வேண்டுமா?

ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா " இல்லை ". முஸ்லிம்களும் யூதர்களும், தமிழர்களில் ஒரு சாதிப் பிரிவினரும்( மார்க்க கல்யாணம் ) தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை ஒரு சடங்காக ஆண்களுக்குச் செய்கிறார்கள். கட்டாயம் சிறு வயதில் தான் சுன்னத் செய்ய வேண்டும் என்று இல்லை. இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் Phimosis போன்ற மருத்துவக் காரணங்களுக்காகவும் சுன்னத் செய்யலாம். சுன்னத் செய்தால் அதிக சிரத்தை எடுத்து ஆண்குறியை சுத்தம் செய்வது இலகு. மற்றும் படி அதில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதனை மருத்துவ உலகம் Cosmetic Surgery ஆகப் பார்க்கிறது. ஆண்கள் பலருக்கும் சிறுவயதில் விளையாட்டாய் தோன்றும் ஓர் சந்தேகம்!! பெண்கள் வயதுக்குவந்தால் மட்டும் சடங்கு, சம்பரதாயம் எல்லாம் செய்கிறார்கள்.ஆண்களுக்கு எதுவும் இல்லையா என்பது.சிலர் பெற்றோர்களிடம் கேட்டே விடுவார்கள். ஆனால் பெற்றோர்கள் ஏதாவது சொல்லி சமாளித்து விடுவார்கள். உண்மையில் பெண்களைப்போல ஆண்களுக்கும் சடங்குகள் இருக்கின்றனவா எனக்கேட்டால் அதற்கான பதில்தான் மார்க்க கல்யாணம். பூப்பெய்திய பெண்ணுக்கு சடங்கு வைத்து அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என்று அறிவிப்பதைப்போ

வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஆண்கள் வயதுக்குவரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முந்திய பதிவுல் பார்த்தோம். இந்தப் பதிவில் ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகப் பார்க்கலாம். வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது? விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லா சமூகங்களிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. ஆகவே பதின்ம வயதுடையவ

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.